ஒரே மேடையில் பல்வேறு கட்சியின் தலைவர்கள்..! மஜகவின் நாகை வடக்கு இஃப்தார் நிகழ்வில் சகோதரத்துவம்..!!

சீர்காழி.ஜுன்.06., நாகை வடக்கு மாவட்டம் தைக்கால் துளசேந்திரபும் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் கிளை சார்பாக #இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

200 அடி நீளத்தில் பந்தல் போடப்பட்டு பிரமாண்ட ஏற்பாட்டுடன் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் P.V. பாரதி (#அதிமுக), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் (#திமுக), #பாமக துணைப் பொதுச்செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, சே.ரகுராஜ் (#விசிக), S.ஜெயராமன் ஒன்றிய செயலாளர் (அதிமுக) கமாலுதீன் (#SDPI) உள்ளிட்ட எதிரும் புதிருமான அரசியல் கட்சியின் பிரமுகர்கள், மஜகவின் அழைப்பை ஏற்று ஒரே மேடையில் கூடினர்.

200-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் வருகை தந்து சிறப்பித்தனர். முக்கியமாக தைக்கால் ஜமாத்தினர் மொத்தமாக வருகை தந்து நிகழ்ச்சிக்கு மெறுகூட்டினர்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மைத்துனரும், திருமதி துர்கா அவர்களின் தம்பியுமான மருத்துவர் இராஜமூர்த்தி அவர்கள் நோன்பின் மாண்பு குறித்து சிறப்பானதொரு விளக்கவுரையாற்றினார். அவரது உரை அனைத்து மதத்தினர்களின் உள்ளத்தையும் கவரும் வகையில் இருந்து.

சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி அவர்கள், துளியும் அரசியல் பேசாமல், நோன்பு குறித்தும், அது ஏற்படுத்தும் நல்ல நோக்கம் குறித்தும் உரையாற்றினார்.

#மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், இஃப்தார் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும், அதனால் சமூக நல்லிணக்கம் மலர்வது குறித்தும், இது போன்ற நிகழ்வுகளின் மூலமாகவே புரிதல்களை ஏற்படுத்த முடியும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முத்தாய்பாக பாடகர் தேரிழந்தூர் தாஜூதீன் அவர்கள் இடையிடையே ‘பூமலை போல் வந்தது நோன்பு அதனால் புரிந்து விடும் தேன் ரமலான் மான்பூ’ என்ற பாடலையும், ‘அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே’ என்ற பாடலையும் பாடி அனைவரையும் உருக வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் நிறைவாக, நோன்பு துறப்பதர்க்கு முன்பாக ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்ற பாடலையும் டைமிங்காக பாடி பரவசப்படுத்தினார்.

ஒரு இஃப்தார் நிகழ்வில் அரசியல் பேதமின்றி எல்லோரையும் இணைத்தது ஒரு ஆரோக்கியமான அனுகுமுறை என்று பத்திரிகை நண்பர்கள் பாராட்டினார்.

பந்தலின் மற்றொரு பகுதியில் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு, அதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களும் நோன்பு திறந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் மாலிக், மாவட்ட துணை செயலாளர் ஜெகபர் அலி, ஒன்றிய செயலாளர் சாதிக்பாட்சா, அன்வர், கிளைச்செயலாளர் ஜாகிர் உசேன், மஞ்சை சதக்கத்துல்லா, நாகூர் ஹமீது ஜெகபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்
09.06.18