மஜக தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! மாநில பொருளாளர் பங்கேற்பு..!!

தேனி.ஆக.10., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கேரளா ராமக்கல்மெட்டு பகுதியில் நேற்று நடந்தது.

மாவட்ட செயலாளர் கம்பம் ரியாஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் பெரியகுளம் ஷேக், மாவட்ட துணை செயலாளர்கள் என்.டி.பட்டி அனிஸ், காதர், ஜாஃபர், கம்பம் தன்விர், மாநில துணை பொதுசெயலாளர் மன்னை செல்லசாமி, ஊடகபிரிவு துனை செயலாளர் சிக்கந்தர், மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம் ஆகியோருடன் தேனி, கம்பம், பெரியகுளம் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டதில் பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் கம்பம், தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் மற்றும் பல பகுதிகளிள் புதிய நிர்வாகிகளை இனைப்பது கட்சி கொடிகளை அனைத்து பகுதிகளிலும் ஏற்றுவது மற்றும் நிர்வாகிகளுக்கு கட்சியை பலபப்டுத்துவது பற்றி ஆலோசனை வழங்கினார்கள்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தேனி மாவட்டம்.
09.08.17