(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி...) பசும் வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை பெருபான்மையாக கொண்டது நமது தமிழ்நாடு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே திருவள்ளுவர் அவர்கள் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்" என்று விவசாயத்தை உயர்வுப்படுத்தி கூறினார். விவசாயத்தை செம்மைப்படுத்தும் மண், மழை, கால் நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தொன்மை காலத்தில் தமிழர்கள் முன்னெடுத்த வழிபாடுகளற்ற நாகரீகம்தான் பொங்கல் திருநாள் என்றும் தமிழர் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. இதனை அறுவடை திருநாள் என்றும் சொல்வதுண்டு. விவசாயம் மூலம் பொருளாதாரம் குவியும் காலம் இது என்பதால்தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றார்கள். தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கும் இத்திருநாளில் இயற்கை விவசாயத்தை வளர்க்கவும், தண்ணீர் மேலாண்மை ஒழுங்குப்படுத்தவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் உறுதி ஏற்போம். தமிழர் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர். மனிதநேய ஜனநாயக கட்சி, 13.01.2018.
செய்திகள்
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் தேவை…! சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்…!!
(பகுதி - 2) கடந்த 11.01.2018 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டசபையில் பேசியதாவது.., "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழர்கள் உலகமெங்கும் சென்று உழைக்கிறார்கள். வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சென்று உழைக்கிறார்கள். இவர்களது நலனுக்காக தமிழக அரசு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். கேரளா அரசு வெளிநாடு வாழ் மலையாளிகளுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி இருக்கிறது. தமிழக அரசும் அப்படி செய்தால் வெளிநாடு வாழ் தமிழர்களும் பயன் அடைவார்கள். தமிழக அரசும் பயன் அடையும். இக்கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 13_01_2018
மறைந்த கோவை சிறைவாசி ஒஜீர் அவர்கள் குடும்பத்திற்கு வாக்குறுதியளித்த நிலம் ஒப்படைப்பு..!
கோவை.ஜன.13., கோவை சிறைவாசி சகோ.ஒஜிர் அவர்கள் கடந்த 05.10.2016 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அதை தொடர்ந்து அவரின் நல்லடக்கத்தில் பங்கேற்ற சமுதாய தலைவர்கள் பலரும் அக்குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிப்பதாக தெரிவித்தனர், மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமீமுன்அன்சாரி MLA அவர்கள் ரூ.1 இலட்சம் நிவாரண தொகை வழங்குவதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து மஜக சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது, வாக்குறுதியளித்த பல இயக்கங்களும், ஜமாத்துகளும் நிவாரண உதவி வழங்கினர். இன்று அக்குடும்பத்திற்கு சுமார் 2சென்ட் நிலம் (ரூ.8 இலட்ச ரூபாய் மதிப்பில்) இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக வாங்கப்பட்டு ஒஜிர் அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மஜக சார்பாக மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ், அவர்கள் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து அந்த இடத்தில் முஸ்லிம் லீக் சார்பாக வீடு கட்டி தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முயற்சிக்கு கூட்டமைப்பு சார்பாக முழு ஒத்துழைப்பு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 13.01.18
வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!
வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக), அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 12.01.18
பாஜக H.ராஜாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் – தனியரசு, கருணாஸ், அன்சாரி கடும் கண்டனம்!!
(#தமிழக_கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் தனியரசு MLA, #முக்குலத்தோர்_புலிப்படை_தலைவர் கருணாஸ் MLA, #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை...) “தமிழை ஆண்டாள்” என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையை முன்வைத்து பாஜக தலைவர்களில் ஒருவரான H.ராஜா என்பவர் தரம் தாழ்ந்த சொற்களால் அவரை இழிவுப்படுத்தியுள்ளார். அது மட்டுமின்றி சம்மந்தமே இல்லாமல், இத்துடன் நபிகள் நாயகத்தையும், அவர்களின் மனைவியரையும் இழிவுப்படுத்தி பொது அமைதியை கெடுக்கும் வகையில் பேசியுள்ளார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். கவிஞர் வைரமுத்து அவர்கள் அது குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ள நிலையில், அவரை நெருக்கடிகளுக்கு ஆளாக்கி தொடர்ந்து பாஜகவினர் விமர்சிப்பதை ஏற்றக்கொள்ள முடியாது. வைரமுத்து தமிழ் சமூகத்தின் முகவரியில் ஒருவர் என்பதை மறந்துவிடக் கூடாது. H.ராஜா அவர்கள் தொடர்ந்து திராவிட இயக்கத்தவர்களையும், தமிழ் உணர்வாளர்களையும், மத சிறுபான்மையினர்களையும், இடதுசாரி ஆதரவாளர்களையும் தரம் தாழ்ந்து பேசி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதை பாஜக தலைமை அங்கீகரிக்கிறதா...? என்பதை அவர்கள் விளக்க வேண்டும். தமிழ் இனத்திற்கும், தமிழுக்கும் எந்த வித தொடர்புமற்ற H.ராஜா தமிழ் மண்ணில் சமூக அமைதியை குலைப்பதை தமிழ் சமூகம் வேடிக்கை பார்க்க கூடாது.. தனது கேவலமான கருத்துக்கு H.ராஜா உடனடியாக மன்னிப்பு