(#தமிழக_கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் தனியரசு MLA, #முக்குலத்தோர்_புலிப்படை_தலைவர் கருணாஸ் MLA, #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை…)
“தமிழை ஆண்டாள்” என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையை முன்வைத்து பாஜக தலைவர்களில் ஒருவரான H.ராஜா என்பவர் தரம் தாழ்ந்த சொற்களால் அவரை இழிவுப்படுத்தியுள்ளார்.
அது மட்டுமின்றி சம்மந்தமே இல்லாமல், இத்துடன் நபிகள் நாயகத்தையும், அவர்களின் மனைவியரையும் இழிவுப்படுத்தி பொது அமைதியை கெடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் அது குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ள நிலையில், அவரை நெருக்கடிகளுக்கு ஆளாக்கி தொடர்ந்து பாஜகவினர் விமர்சிப்பதை ஏற்றக்கொள்ள முடியாது. வைரமுத்து தமிழ் சமூகத்தின் முகவரியில் ஒருவர் என்பதை மறந்துவிடக் கூடாது. H.ராஜா அவர்கள் தொடர்ந்து திராவிட இயக்கத்தவர்களையும், தமிழ் உணர்வாளர்களையும், மத சிறுபான்மையினர்களையும், இடதுசாரி ஆதரவாளர்களையும் தரம் தாழ்ந்து பேசி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதை பாஜக தலைமை அங்கீகரிக்கிறதா…? என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.
தமிழ் இனத்திற்கும், தமிழுக்கும் எந்த வித தொடர்புமற்ற H.ராஜா தமிழ் மண்ணில் சமூக அமைதியை குலைப்பதை தமிழ் சமூகம் வேடிக்கை பார்க்க கூடாது..
தனது கேவலமான கருத்துக்கு H.ராஜா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்..
அன்புடன்;
#உ_தனியரசு_MLA ,
#S_சேது_கருணாஸ்_MLA ,
#M_தமிமுன்_அன்சாரி_MLA .