கோவை.மே.02., மே 01 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கிணத்துகடவு பகுதி செயலாளர் ஹாருண்ரஷீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, அவர்கள் கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் PM.முகம்மது ரபீக், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், பகுதி பொருளாளர் காதர், துணை செயலாளர் அபு, மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாவட்டம் 01.05.18
செய்திகள்
திண்டுக்கல் நகரம் மஜக சார்பில் இனிப்பு வழங்கி மே தின கொண்டாட்டம்..!
திண்டுக்கல்.மே.01., இன்று காலை 09:30 மணியாளவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் நகரம் சார்பாக மே-01 உழைப்பாளர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில்நகர செயலாளர் சிக்கந்தர் (சிக்கி) தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட பொருளாளர் M.அனஸ் முஸ்தபா கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சேக் பரித், நகர துணை செயலாளர் அஜார், ரவுண்ரோடு சாகுல் பாய், ஷாஜகான் AC, ஆட்டோ ஹக்கிம், ஜாபர், சையது மற்றும் நிர்வாகிகள் திரலாக கலந்து கொண்டனர்.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_திண்டுக்கல்_மாவட்டம்01.05.2018
அன்வர் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்..!
(மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) தமிழக #வக்பு_வாரிய-த்தின் புதிய தலைவராக தேர்வு செய்யபட்டிருக்கும் ஜனாப் #அன்வர்_ராஜா_MP அவர்களுக்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். வளமான சொத்துக்களை கொண்ட வக்பு வாரியம் நிர்வாக சீர்கேடுகளாலும், ஊழலாலும் ஸ்தம்பித்து கிடக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக கடந்த காலத்தில் மன்னர்களாலும், தளபதிகளாலும், செல்வந்தர்களாலும், கொடையாளர் களாலும் வாரி வழங்கப்பட்ட சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கவும், இருக்கும் சொத்துக்களை பாதுகாக்கவும் ஜனாப் அன்வர் ராஜா MP அவர்கள் நேர்மையான முறையில், சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். முத்தலாக் மசோதா குறித்து பேசிய அவரது நாடாளுமன்ற உரைக்கு பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு முஸ்லிம் சமுதாய மக்களிடம் அதிகமாக இருக்கிறது என்பதை இத்தருணத்தில் நினைவு படுத்தி அவருக்கு எமது நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்_செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 30.04.2018
மே தினத்தை முன்னிட்டு முத்துப்பேட்டை நகர மஜக சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு கைக்குடை வழங்கும் நிகழ்ச்சி..!
திருவாரூர்.மே.01., இன்று மே 01 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக தொழில்சங்கம் (MJTS) சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகர மஜக சார்பில் நடைபாதை சிறு வியாபாரிகளுக்கு கைக்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் திரு ராஜேஸ் அவர்கள் இது ஒரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சி என்ற போதிலும் நல்ல ஒரு சேவையை முன்னெடுத்துள்ளீர்கள் என்று கூறி உற்சாகத்தோடு கலந்துகொண்டு வியாபாரிகளுக்கு குடைகளை வழங்கி துவக்கி வைத்தார் இதில் காவல் துறை உதவி ஆய்வாளர் திரு கனபதி அவர்களும் கலந்துகொண்டு வியாபாரிகளுக்கு குடைகளை வழங்கினார். ஏழை சிறு வியாபாரிகள் சாலை யோர நடைபாதையில் அன்றாடங்காய்ச்சிகளாய் பிழைப்பு நடத்துபவர்கள் வெயிலின் கடும் வெப்பத்தால் அவதிப்படுவதை கன்ட முத்துப்பேட்டை நகர மஜகவினர் தங்களால் இயன்ற உதவியாக முதற்கட்டமாக நிழலுக்கான குடைகளை வழங்க சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்வில் மஜக நகர நிர்வாகிகள் பஷீர் அலி, முகமது மைதீன், அஜ்மீர் கான், பாஷித் உட்பட ஏராளமான மஜகவினரும் கலந்துகொண்டனர் சிறப்பித்தனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_முத்துப்பேட்டை_நகரம் 01.05.2018
விவசாயிகளின் வாகன பேரணி நிறைவு..! மஜக சார்பில் உற்சாக வரவேற்பு..!!
திருவாரூர்.மே.01., காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை பின்பற்றி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி #காவிரி_மேலாண்மை_வாரியம் உடன் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி #தமிழக_அனைத்து_விவசாயிகள்_சங்கங்களின்_ஒருங்கினைப்பு_குழு தலைவர் தோழர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் கடந்த 25/4/2018 அன்று வேதாரண்யத்தில் இருசக்கர வாகன பேரணியை #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள் தொடங்கி வைத்தார். இப்பேரணி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுமார் 2,500 கிலோ மீட்டர் பரப்புரை பயணம் செய்து இறுதியாக 29/04/2018 அன்று நாகை வழியாக திருவாரூர் வந்தடைந்தது. முன்னதாக நாகையில் சட்டமன்ற அலுவலக அருகில் MLA அவர்களின் சார்பில் நாகை தெற்கு மாவட்ட மஜக பொருளாளர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் இரு சக்கர வாகன பேரணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிறைவாக திருவாரூர் வந்தடைந்த இரு சக்கர வாகன பேரணிக்கு மஜகவின் மாநில செயலாளர் #நாச்சிகுளம்_தாஜுதீன் அவர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாது தமிழகம் தழுவிய அளவில் காவிரி மீட்பு பற்றிய பரப்புரை செய்து இரு சக்கர வாகனத்தில் சுற்ற வந்த போராளிகளுக்கு நடைபெற்ற பாராட்டு கூட்டத்திலும் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன்