வேலூர்.ஜூன்.04., வேலூர் கிழக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக #சமுக_நல்லிணக்க #இஃப்தார் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாய் நேற்று (03.06.018) மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாருன்ரசீது M.com, அவர்கள் களந்து கொண்டு இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளார்களாக #திமுக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன்_MLA,#விடுதலை_சிறுத்தைகள்_கட்சி மாநில அமைப்பு செயலாளர் நீலசந்திர குமார், #நாம்_தமிழர்_கட்சி மாநில மாணவர் பாசறை ஒருங்கினைப்பாளர் சல்மான், விசிக இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துனை செயலாளர் ஜாபீர், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துனை செயலாளர் JM.வசீம்அக்ரம், மாநில இளைஞர் அணி செயலாளர் SG.அப்சர் சையத், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, ஆகியோர் களந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் A.முஹம்மது யாசீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட பொருளாளர் குஸ்ரு கௌஸ் மொய்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட துணை செயலாளர்கள், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகுக்க, இந்த இஃப்தார் நிகழ்ச்சி M.ஜாஹீர்உசேன், கஸ்பாஏஜாஸ், N.சைய்யதுஉசேன், அமின், சைய்யத்காதர், பட்டேல் ஷமீல், ரிஸ்வான், முஹம்மது சலீம், திருவண்ணாமலை மாவட்ட, நகர நிர்வாகிகள், வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், குடியாத்தம் நகர நிர்வாகிகள்
செய்திகள்
நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.4.80 இலட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பு!
நாகை.ஜுன்.04., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், மஞ்சகொல்லை ஊராட்சி பள்ளி வாசல் புதுதெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி 2017-18-ல் இருந்து ரூபாய் 4.80 இலட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 03/06/2018
இதயங்களை இணைத்த மஜகவின் இப்தார் நிகழ்ச்சி..!
கோவை.ஜுன்.03., கோவை மாநகர் மாவட்டம் தெற்கு பகுதி #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு (நோன்பு திறப்பு) இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை பகுதி செயலாளர் காஜா, பொருளாளர் நிவாஸ், துணை செயலாளர்கள் ரஹ்மத்துல்லா, அப்பாஸ், ஜக்கிரியா, மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ABT.பாருக், ATR.பதுருதீன், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாகீர், மற்றும் அனைத்து பகுதி கிளை நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 03.06.18
கோட்டைப்பட்டினத்தில் மஜகவின் எழுச்சி..!
அறந்தாங்கி.ஜூன்.03., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் கடந்த மாதம் மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ் முன்னிலையில் முகம்மது மைதீன் (செல்லாத்தா), ராஜ் முகம்மது, ராஷிக் ஆகியோர் தங்களை சேவை அரசியல் பேரியக்கமாம் மஜகவில் இணைத்துக்கொண்டனர்.. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம். 03.06.2018
தமிழ் நாட்டையும், நல்லிணக்கத்தையும் காப்பாற்றுவது நமது கடமை..! அபுதாபி ‘இஃப்தார்’ நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!!
அமீரகம்.ஜூன்.03., அபுதாபியில் இஃப்தார் நிகழ்வை முன்னிட்டு, 'மர்ஹபா' அமைப்பு நடத்திய சமூக நல்லிணக்கப் பெருவிழாவில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA , #திமுக வின் நட்சத்திர ஊடகவியாளர் தமிழன்.பிரசன்னா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் #ஆளுர்_ஷாநவாஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய தமிமுன் அன்சாரி அவர்கள், ஆளூர் ஷாநவாஸ் அவர்களை, 'தான் வளர்த்த பிள்ளை' என்று கொண்டாடினார். அதுபோல் பிரசன்னாவை ,தொல்லைக்காட்சிகள் நிறைந்த தொலைகாட்சியில் , நல்ல காட்சிகளை தருபவர் என்று பாராட்டி பேசினார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு; ஒரே மனநிலை கொண்ட என்னையும், தம்பி ஷாநவாஸயையும், தம்பி பிரசன்னாவையும் இந்த மேடையில் இணைத்தமைக்காக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மர்ஹபா அமைப்பை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் நிகழ்சியில் இரண்டாவது முறையாக பங்கேற்கிறேன். அடுத்த முறை அபுதாபி லால்பேட்டை ஜமாத்தும், மர்ஹபாவும் இணைந்து ஒரு இப்தாரை நடந்த வேண்டும். அதில் என்னையும் அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (பலத்த கைத்தட்டல்) இதற்கு சமூக நல்லிணக்க பெருவிழா என பெயர் சூட்டி நிகழ்ச்சியை நடத்துவது பாராட்டுக்குரியது. இன்று நமது நாட்டில் நல்லிணக்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதை எல்லோரும் சேர்த்து காப்பாற்ற