
மார்ச்.27,
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து பண்டாரவாடை கடைத்தெருவில் தேர்தல் பரப்புரை இன்று மாலை நடைப்பெற்றது.
பஜார் பள்ளிவாசல் அருகில் பெருந்திரளாக மக்கள் குழுமி இருந்தனர் அவர்களுக்கு மத்தியில் மஜக பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் பேரா. ஜவாஹிருல்லாவிற்கு ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு உரையாற்றினார்.
பொருளாளர் பேசும் போது, தமிழகத்தின் உரிமை மீட்கப்பட வேண்டும் என்று சொன்னால், திமுக ஆட்சிக்கு வர வேண்டும் அதற்கு இத்தொகுதியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் வெற்றி பெற வேண்டும் என வாக்காளர்களிடம் சுட்டி காட்டினார்.
அப்பொழுது வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அருகில் இருந்தனர்.
இதில் MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, கொள்கை விளக்கக் அணி துணை செயலாளர் காதர் பாட்சா, மருத்துவ சேவை அணி துணை செயலாளர் முஹம்மது மஃரூப், மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது அலி, ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் திரளான மஜக வினர் கலந்துக் கொண்டனர்
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பாபநாசம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021