மஜக கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞர்அணி நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம்!

image

கோவை.ஆக.07., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட மருத்துவ
அணிசெயலாளர் அபு, துணை செயலாளர் செய்யது இப்ராஹீம்,

இளைஞரணி மாவட்ட துணை செயலாளர்கள் அக்பர், சபீர், அன்சர் மற்றும் அனைத்து பகுதி  கிளை மருத்துவ அணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.

ஆகஸ்ட்-15 அன்று நடைபெறும் மருத்துவமுகாம் மற்றும் இரத்ததான முகாமை அனைத்து நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்துவது எனவும்,

மருத்துவ முகாம் நடைபெறும்
வளாகத்தில் தேசியகொடி ஏற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்.
06.08.17