நாகை தெற்கு இரட்டை மதகடி மஜக ஆலோசனை கூட்டம்..!

image

நாகை.ஆக.07., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம், கீவளுர் ஒன்றியம், இரட்டை மதகடியில் நேற்று (06/08/2017) மனிதநேய ஜனநாயக கட்சியின் வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ரியாஸுதீன் தலைமையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாலர் பரகத் அலி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அதில் இரட்டை மதகடி சகோதரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்யப்பட்டது.

பிறகு புதிதாக வந்திருந்த சகோதரர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

புதிய பொறுப்புக்குழு போடப்பட்டது. அதன் விபரம் வருமாறு.

கிளை பொறுப்பாளர்களாக N.S.தாவூது அவர்களையும், H.M.சாகுல் ஹமீது அவர்களையும்
நியமிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் இனி வரும் காலங்களில் தீவிரமாக கிளை உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் ஒரு மாதத்திற்க்குள் கிளை பொதுக்குழு கூட்டம் கூட்டி நிர்வாகிகளை தேர்வு செய்வது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
நாகை தெற்கு மாவட்டம்
06.08.17