திருவாரூர்.ஆக.07., காவேரி டெல்டா மாவட்டங்களை கபளீகரம் செய்யும் நோக்கோடு மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை தொடர்ந்து, தற்போது “பெட்ரோலிய ரசாயான முதலீட்டு மண்டலத்தை” டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.
இதில் நாகை, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 46 கடலோர கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன.
இதனை கண்டித்தும், விவசாய நிலங்களை பாதுகாக்கும் பொருட்டும், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தோழர் P.R. பாண்டியன் தலைமையில் இன்று தொடர் வாகன பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது.
இப்பிரச்சாரத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 14 வரை இப்பிரச்சாரப் பயணம் டெல்டா மாவட்டங்களில் நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை முபாரக், திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், நாகை தெற்கு மாவட்ட பொருளாலர் வடகரை பரக்கத் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர்கனி மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திருவாரூர் மாவட்டம்.
07.08.17