கோவை.ஆக.07., மனிதநேய ஜனநாயக கட்சி கிணத்துக்கடவு பகுதி நிர்வாக ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் ஜாபர்அலி அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொருளாளர் காதர், துணை செயலாளர்கள் அபு, ஹாருண் ரஷீது, தொழிற் சங்க செயலாளர் அக்பர் கான், மாணவர் இந்தியா செயலாளர் இம்தியாஸ்,
மருத்துவ அணி செயலாளர்
பிரோஸ் கான், சுற்றுசூழல் அணி செயலாளர் அக்பர்அலி, வர்த்தக அணி செயலாளர் முஹம்மது நசீர், ஆகியோர் கலந்துகொண்டனர்,
இக்கூட்டத்தில் இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளராக சாதிக் அவர்களும், இளைஞர் அணி செயலாளராக
அசார் பாபு, வழக்கறிஞர் அணி செயலாளராக அஷாருதீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்…
ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தன்று
மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞர்அணி நடத்தும் இரத்ததான முகாம், மருத்துவ முகாமிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது,
ஆகஸ்ட் 15ல் நடைபெறும் இரத்த தான முகாமில் பகுதிசார்பாக 71யூனிட் இரத்ததானம் செய்வது என முடிவுசெய்யப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்.
06.08.2017