You are here

பெரியாராலும் பேரறிஞர் அண்ணாவாலும் பக்குவபடுத்தபட்ட மண்ணில் சமுகநல்லிணக்கம் ஓங்கி ஒலிக்க வேண்டும்..! இஃப்தார் நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் SS.ஹாருன் ரசீது உரை..!!

வேலூர்.ஜூன்.04., வேலூர் கிழக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக #சமுக_நல்லிணக்க #இஃப்தார் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாய் நேற்று (03.06.018) மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாருன்ரசீது M.com, அவர்கள் களந்து கொண்டு இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளார்களாக #திமுக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன்_MLA,#விடுதலை_சிறுத்தைகள்_கட்சி மாநில அமைப்பு செயலாளர் நீலசந்திர குமார், #நாம்_தமிழர்_கட்சி மாநில மாணவர் பாசறை ஒருங்கினைப்பாளர் சல்மான், விசிக இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துனை செயலாளர் ஜாபீர், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துனை செயலாளர் JM.வசீம்அக்ரம், மாநில இளைஞர் அணி செயலாளர் SG.அப்சர் சையத், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, ஆகியோர் களந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர் A.முஹம்மது யாசீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட பொருளாளர் குஸ்ரு கௌஸ் மொய்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்,

மாவட்ட துணை செயலாளர்கள், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகுக்க, இந்த இஃப்தார் நிகழ்ச்சி M.ஜாஹீர்உசேன், கஸ்பாஏஜாஸ், N.சைய்யதுஉசேன், அமின், சைய்யத்காதர், பட்டேல் ஷமீல், ரிஸ்வான், முஹம்மது சலீம், திருவண்ணாமலை மாவட்ட, நகர நிர்வாகிகள், வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், குடியாத்தம் நகர நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள், ஜமாத்தார்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com, அவர்களும், திமுகவின் கார்திகேயன் அவர்களும் வெவ்வேறு அணிகளில் களம் கண்டனர், இருந்த போதிலும், தற்போது இருவரும் ஒரே மேடையில் தோன்றியது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடாக அமைந்தது.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
03.06.2018

Top