நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.4.80 இலட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பு!

நாகை.ஜுன்.04., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், மஞ்சகொல்லை ஊராட்சி பள்ளி வாசல் புதுதெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி 2017-18-ல் இருந்து ரூபாய் 4.80 இலட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
03/06/2018