தமிழ் நாட்டையும், நல்லிணக்கத்தையும் காப்பாற்றுவது நமது கடமை..! அபுதாபி ‘இஃப்தார்’ நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!!

அமீரகம்.ஜூன்.03., அபுதாபியில் இஃப்தார் நிகழ்வை முன்னிட்டு, ‘மர்ஹபா’ அமைப்பு நடத்திய சமூக நல்லிணக்கப் பெருவிழாவில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA , #திமுக வின் நட்சத்திர ஊடகவியாளர் தமிழன்.பிரசன்னா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் #ஆளுர்_ஷாநவாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்று பேசிய தமிமுன் அன்சாரி அவர்கள், ஆளூர் ஷாநவாஸ் அவர்களை, ‘தான் வளர்த்த பிள்ளை’ என்று கொண்டாடினார். அதுபோல் பிரசன்னாவை ,தொல்லைக்காட்சிகள் நிறைந்த தொலைகாட்சியில் , நல்ல காட்சிகளை தருபவர் என்று பாராட்டி பேசினார்.

அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு;

ஒரே மனநிலை கொண்ட என்னையும், தம்பி ஷாநவாஸயையும், தம்பி பிரசன்னாவையும் இந்த மேடையில் இணைத்தமைக்காக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மர்ஹபா அமைப்பை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் நிகழ்சியில் இரண்டாவது முறையாக பங்கேற்கிறேன். அடுத்த முறை அபுதாபி லால்பேட்டை ஜமாத்தும், மர்ஹபாவும் இணைந்து ஒரு இப்தாரை நடந்த வேண்டும். அதில் என்னையும் அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (பலத்த கைத்தட்டல்)

இதற்கு சமூக நல்லிணக்க பெருவிழா என பெயர் சூட்டி நிகழ்ச்சியை நடத்துவது பாராட்டுக்குரியது. இன்று நமது நாட்டில் நல்லிணக்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதை எல்லோரும் சேர்த்து காப்பாற்ற வேண்டிய கடமை இருக்கிறது. இங்கே எல்லா மதத்தினரும் வந்திருக்கிறார்கள். இந்த ஒன்று கூடலதான் நமது கலாச்சாரமாகும்.

உரிமைகள் எனும் போது அது அனைவருக்கும் பொதுவானது. சிறுபான்மையினர் உரிமைகள், நலன்கள், பாதுகாப்பு என வரும்போது அது இந்தியாவில் முஸ்லிம்களை குறிக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்துக்களையும், கிருஸ்தவர்களையும் குறிக்கும். அதுதான் யதார்தம்.

நாம் இந்தியாவில் நமது பாதுகாப்பை, உரிமையை கேட்கிறோம். அதை இந்துக்கள் துணை நின்று காக்க வேண்டும். அதுபோல் அமீரகத்திற்கு நம்மோடு வந்து வேலை பார்க்கும் இந்துக்களின், கிருஸ்தவர்களின், தலித்துகளின் உரிமைகளையும், பாதுகாப்பையும் தமிழக முஸ்லிம்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதுதான் சமூக நீதி.

பாகிஸ்தான் பிரிந்த போது, ஜின்னா அவர்கள், காயிதே மில்லத்தை பார்த்து ,உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள் என்றாராம். உடனே காயிதே மில்லத் அவர்கள், நேற்று வரை நாம் ஒரே நாட்டவர். இப்போது நான் இந்தியன். நீங்கள் பாகிஸ்தானியர். எங்களைப் பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்களை பாதுகாத்திடுங்கள். எங்களுக்கு அது போதும் என்றார். அவர் தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத். அந்த வழியை தான் இங்குள்ள இதர மத சிறுபான்மை மக்களிடம் நீங்கள் காட்ட வேண்டும்.

அது போல இந்தியாவில் உள்ள சிறுபான்மைையினரை இந்துக்கள் பாதுகாக்க வேண்டும். அதுதான் உண்மையான சமூகநீதியாகும். அதை அவர்கள் சிறப்பாக செய்கிறார்கள் என்பதற்காக பாராட்ட வேண்டும்.

தற்போது தமிழகத்தில் குழப்பமான அரசியல் நிலவுகிறது. திராவிட கட்சிகளை அழிக்க, சிலர் டெல்லியிலிருந்தவாறு துடிக்கிறார்கள். தளபதி ஸ்டாலின், சகோதரர் TTV தினகரன், எடப்பாடியார், அன்புமணி ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான் என்று அரசியல் பந்து இவர்களிடம் தான் இருக்க வேண்டும். இதை வேறுெ எவரும் கைப்பற்ற அனுமதிக்க கூடாது.

திராவிட இயக்கங்கள் ஒருவரோடு ஒருவர் மோதி விமர்சிக்கும் நேரம் இதுவல்ல. அதுபோல திராவிட தலைவர்களும், தமிழ்தேசிய தலைவர்களும் தங்களுக்குள் மோதுவதை, விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இப்போது தீய சக்திகளிடமிருந்து, தமிழ்நாட்டையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது தான் நமது முக்கிய கடமையாகும். இவ்விஷயத்தில் நாங்கள் மிகுந்த நிதானத்தோடு செயல்படுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு, அபுதாபி Indian Social center-ல் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, ஆளூர் ஷாநவாஸ், பிரசன்னா ஆகியோரை அழைத்து சிறப்பு செய்தனர்.

தமிமுன் அன்சாரி அவர்கள் அங்கே உள்ளே குறிப்பேட்டில் கையெழுத்திட்டார்.

இந்நிகழ்ச்சியில் ‘நோபல் மரைன்’, சாகுல் ஹமீது, குத்தாலம் அஷ்ரப், ஆடிட்டர் இளவரசன், தமிழ் மக்கள் மன்றம் சிவா, ‘பாரதி நட்புக்காக’ தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் கலீல், சேலம் அரபு கல்லூரி மௌலவி முகம்மது அபுதாகிர் பாகவி, மர்ஹபா நிர்வாகிகள் முகம்மது ரபி, M.சுகைபுதீன் மஜக விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், MKP அமீரக செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் அஷ்ரப், துணைச் செயலாளர்கள் அபுல்ஹசன், அசாலி அஹமது, அப்துல் ரெஜாக், அபுதாபி மண்டல செயலாளர் தைய்யூப், பொருளாலர் காஜா மைதீன், துணை செயலாளர் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#MKP_ஐக்கிய_அரபு_அமீரகம்