மேலப்பாளயத்தில் மக்கள் அலை…. மலைப்பாம்பை விரட்ட தடி வேண்டுமா? குச்சி வேண்டுமா? மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கேள்வி…!


நெல்லை.ஏப்.03., பாளையங்கோட்டை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் #திமுக வேட்பாளராக உதயசூரியனில் போட்டியிடும் திரு #அப்துல்_வஹாப் அவர்களை ஆதரித்து #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் மேலப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார்.

மக்கள் அலையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி, INLP சார்பில் மாநில செயலாளர் கோவை பல் நாசர் ஆகியோரும் பங்கேற்றனர்.

வேட்பாளர் அப்துல் வஹாப் அவர்கள் மஜகவின் அரசியல் நிலைபாட்டை வெகுவாக பாராட்டி துணிச்சலான முடிவு என வர்ணித்தார்.

இப்பொதுக் கூட்டம் வாக்கு வித்தியாசத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தரும் என கூட்டத்திற்கு வந்த பலரும் கூறினர்.

இதில் பேசிய பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மதவாத மலைப்பாம்பை விரட்டி இரும்பு தடி வேண்டுமா? பிளாஸ்டிக் குழாய் வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். இதை விரட்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற இரும்பு தடி தான் சரியான தீர்வு என்பதால் வாக்குகள் சிதறாமல் இக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

மேலும் ஃபாஸிஸம் எந்த மதத்தின் வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்போம் என்றும், ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காக கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என்றும் சூளுரைத்தார்.

இத்தேர்தல் ஜனநாயகம், சமூக நீதி, சகோதரத்துவம், தமிழர் நலன் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான அரசியல் யுத்தம் என்றும் வர்ணித்தார்.

கூட்டம் முடிந்த பிறகு மேலப்பாளைய மாணவர்களும், இளைஞர்களும் அலை, அலையாக வந்து பொதுச்செயலாளரை சந்தித்து தங்கள் வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்து கைக் குலுக்கி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர்கள் காயல் சாகுல், நாகை முபாரக், ஐடி விங் மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட பொருளாளர் மூஸா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நெல்லை இக்பால், மதுரை கனி, மனிதநேய கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் பத்தமடை கனி, ஒன்றிய செயலாளர் கோதர், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜாகிர், மாவட்ட துணை செயலாளர் ஏர்வாடி முஸ்தாக், ஏர்வாடி பேரூர் செயலாளர் ஜாபர் சாதிக், பொருளாளர் பீர் முகைதீன், துணை செயலாளர் ஷேக் முகைதீன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
02.04.21