You are here

குடியாத்ததில் தமஜக தலைவர் கைதை கண்டித்து ஆர்பாட்டம்..! மஜக பங்கேற்பு.!

வேலூர்.ஜுன்.03., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரம் சித்தூர் கேட் பகுதியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அனைத்து கட்சிகளையும் இணைத்து கண்டன ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் இர்ஷாத் அலி தலைமையில் நடைப்பெற்றது.

தமிழர்களின் உரிமைக்காக போராடியவர்களை கொச்சைப்படுத்தி #சமூக_விரோதிகள் என்று பேசிய ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்ட தமஜக தலைவர் கே.எம்.ஷரிப், இணை பொதுச்செயலாளர் இஸ்மாயில் மற்றும் தமஜகவின் அனைத்து நிர்வாகிகளையும் விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் வேலூர் மேற்கு மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொருளாளர் S.MD.நவாஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும் இதில் குடியாத்தம் மஜக ,நாம் தமிழர் கட்சி, AITUC, தமுமுக, மற்றும் பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#குடியாத்தம்_நகரம்
#மஜக_வேலூர்_மேற்கு _மாவட்டம்.
02.06.2018

Top