கோவை.மே.17., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் T.K.அப்துல் பஷீர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS அப்பாஸ், சிங்கை சுலைமான், பாருக், ரபீக், அமீர் அப்பாஸ், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சுதீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர் ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1: பொள்ளாச்சி நகர கூடுதல் பொருப்பாளராக ABT பாருக் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 2: 15 நாளுக்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 3: கோவைமாவட்ட அலுவலகம் விரைவில் பிரம்மாண்டமாக திறக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 16.05.2017
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
கல்பாக்கம், கேளம்பாக்கம், மகாபலிபுரத்தில் மஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி!
காஞ்சி.மே.17., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பாக நேற்று (16.05.2017) கேளம்பாக்கத்தில் 2-இடங்கள், ECR மகாபலிபுரம், கல்பாக்கத்தில் 6-இடங்களிலும் கொடியேற்று விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் யு.ரஹ்மத்துல்லா தலைமை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.முஹம்மது யூசுப், மாவட்ட துணை செயலாளர்கள் கேளம்பாக்கம் கே.அப்துல் சர்தார், கல்பாக்கம் எஸ்.சமியுல்லா, மல்லை ஃபாரூக் ஆகியோர் முன்னிலை வகிக்கத்தனர். மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத் M.com அவர்கள் கொடியேற்றி சிறப்பித்து வைத்தார். மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் திருப்போரூர் ஏ.முஹம்மது ரஃபீக், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் ஜே.பஷீர், து.செயலாளர் இப்ராஹிம் கனி, ஊரப்பாக்கம் காரணைப்புதுச்சேரி கிளை செயலாளர் சுரேஷ், திருக்கழுக்குன்றம் ஹக்கீம் மற்றும் கல்பாக்கம் கிளை செயலாளர் கே.முஹம்மது காலிஃப், முன்னாள் கிளை செயலாளர் எஸ்.உசேன் அலி மற்றும் கிளைகளின் ஏனைய நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பிறகு லுஹர் தொழுகைக்கு பின் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி கல்பாக்கம் சகோதரர்கள் அசத்தினர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING காஞ்சி தெற்கு மாவட்டம். 17-05-2017
மஜக மங்கலம்பேட்டை கிளை சார்பில் இரத்ததான முகாம் !
கடலூர்.மே.17., நேற்று கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்துடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் MA. ஹாஜி முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது, நகர செயலாளர் S. ஃபாஸில் முன்னிலை வகித்தார்கள். இம்முகாமை மஜகவின் மாவட்டச் செயலாளர் நெய்வேலி இபுறாகிம் அவர்கள் துவக்கிவைத்தார்கள். இதில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், இளைஞர் அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம். 16-05-2017
அவசர தேவைக்கு மஜகவினர் 11 யூனிட் இரத்த தானம்!
வேலூர்.மே.16., வேலூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈரோட்டை சேர்ந்த #சவ்தான்யா என்கிற 18 மாத குழந்தைக்கு இரத்தப்புற்று நோய் காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மஜக முன்னால் மாவட்ட து.செயலாளர் M.ஜாகீர் உசேன் அவர்களிடம் இரத்தம் அவசர தேவை என தொடர்பு கொண்டனர். உடனடியாக களம் இறங்கிய மஜகவினர் அக்குழந்தைக்கு தேவையான 11 யூனிட் இரத்தம் வழங்கினார்கள். குழந்தை #சவ்தான்யா-விற்கு உடல் நலம் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம். 16.05.2017
மங்கலம்பேட்டை சமூக நீதி மாணவர் இயக்கம் கலைக்கப்பட்டு மஜகவில் இணைந்தனர்!
கடலூர்.மே.15., இன்று தமுமுகவின் மாணவர் அணியான "சமூக நீதி மாணவர்" இயக்கத்தின் கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை கூண்டோடு கலைக்கப்பட்டு 15க்கும் மேற்பட்டோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர். அனைவருக்கும் மஜகவின் மாவட்டச் செயலாளர் நெய்வேலி இபுறாகிம் அவர்கள் வரவேற்று கட்சியின் அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், இளைஞர் அணி நிர்வாகி மன்சூர், மங்களம்பேட்டை நகர செயலாளர் ஃபைசல் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம் 15-05-2017