You are here

கல்பாக்கம், கேளம்பாக்கம், மகாபலிபுரத்தில் மஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி!

image

image

image

காஞ்சி.மே.17., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பாக நேற்று (16.05.2017) கேளம்பாக்கத்தில் 2-இடங்கள், ECR மகாபலிபுரம், கல்பாக்கத்தில் 6-இடங்களிலும் கொடியேற்று விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்  யு.ரஹ்மத்துல்லா தலைமை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.முஹம்மது யூசுப், மாவட்ட துணை செயலாளர்கள் கேளம்பாக்கம் கே.அப்துல் சர்தார், கல்பாக்கம் எஸ்.சமியுல்லா, மல்லை ஃபாரூக் ஆகியோர் முன்னிலை வகிக்கத்தனர்.

மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத் M.com அவர்கள் கொடியேற்றி சிறப்பித்து வைத்தார்.

மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் திருப்போரூர் ஏ.முஹம்மது ரஃபீக், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் ஜே.பஷீர், து.செயலாளர் இப்ராஹிம் கனி, ஊரப்பாக்கம் காரணைப்புதுச்சேரி கிளை செயலாளர் சுரேஷ், திருக்கழுக்குன்றம் ஹக்கீம்  மற்றும் கல்பாக்கம் கிளை செயலாளர் கே.முஹம்மது காலிஃப், முன்னாள் கிளை செயலாளர் எஸ்.உசேன் அலி மற்றும் கிளைகளின் ஏனைய நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிறகு லுஹர் தொழுகைக்கு பின் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி கல்பாக்கம் சகோதரர்கள் அசத்தினர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
காஞ்சி தெற்கு மாவட்டம்.
17-05-2017

Top