அறந்தாங்கியில் பட்டமளிப்பு விழா..! எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஃபிஜ்ருல் ஹுதா பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தேறியது.

விழாவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று ‘பெண்களுக்கு இஸ்லாம் வழங்கி உள்ள உரிமைகள்’ குறித்து பேசினார்.

மார்க்கம், அது சார்ந்த வாழ்வியல், குடும்ப நிர்வாகம், பொது அறிவு, சமூக சேவை என அனைத்திலும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என வாழ்த்தி பேசினார்.

பன்முக சமூக அமைப்பில் பிள்ளைகள் வளரும் நிலையில், புரிதலும் – இணக்கமும் சூழ அவர்களை வளர்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்றார்.

இவ்விழாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஜாக் அமைப்பைச் சேர்ந்த மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மஜக மாநில துணைப் பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மாநில துணைச் செயலாளர்கள் பேராவூரணி சலாம், ஏ.எம்.ஹாரிஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.