கோவை மாவட்ட மஜக நிர்வாகக்குழு! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!!

image

image

image

கோவை.மே.17., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் T.K.அப்துல் பஷீர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS அப்பாஸ், சிங்கை சுலைமான், பாருக், ரபீக், அமீர் அப்பாஸ், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சுதீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர்  ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1: பொள்ளாச்சி நகர கூடுதல் பொருப்பாளராக ABT பாருக் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

2: 15 நாளுக்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

3: கோவைமாவட்ட அலுவலகம் விரைவில் பிரம்மாண்டமாக திறக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்.
16.05.2017