மகாபலிபுரம்.மே.17., பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், சமகால அரசியலை புரிந்து கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மாணவர் இந்தியா இரண்டு நாள் பயற்சி முகாமை மகாபலிபுரம் அருகில் உள்ள கடம்பாடி கிராமத்தில் 2017 மே-13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்தது.
முதல் அமர்வு
மாணவர் இந்தியாவின் மாநில செயலாளர் A.அசாருதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்கள் “மாணவர்களும் அரசியலும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பாலிமர் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் ரஹ்மான் அவர்கள் இன்றைய “ஊடகங்கள் உண்மையானதா?” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா “மாணவர்களின் அறம்” எனும் தலைப்பிலும் பின்னர் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.
இரண்டாம் அமர்வு
தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் தலைவர் இளையராஜா அவர்கள் “மாணவர்கள் ஏன் போராட வேண்டும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மாலை தேநீர் இடைவேளைக்கு பிறகு :
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் “இன்றைய அரசியலும் மாணவர்களும்” எனும் தலைப்பில் விரிவுரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்து நிகழ்ச்சியை மெருகூட்டினார்.
மே–14 மூன்றாம் அமர்வு
குஜாரத் கலவரம் தொடர்பாக ராகேஷ் சர்மா இயக்கிய FINAL SOLUTION (இறுதி தீர்வு) திரைப்படம் திரையிடப்பட்டது. படம் குறித்தும், தற்போதைய சூழல் குறித்தும் ஆவணப்பட இயக்குனர் தோழர். அமுதன் மாணவர்களுக்கு விளக்கினார்.
நான்காம் அமர்வு
சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் பெரியார் இயக்க தோழருமான வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் “பெரியாரின் இன்றைய தேவை” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
“அதிகார வர்க்கத்தின் மனித உரிமை மீறல்“ எனும் தலைப்பில் தோழர்.தியாகு நீண்ட உரை நிகழ்த்தினார். அவரின் உரை மாணவர்கள் மத்தியில் சிறப்பாக அமைந்தது.
ஐந்தாம் அமர்வு
உணவு இடைவேளையை :
“இஸ்லாமிய பேரரசுகளின் வீழ்ச்சியும் – ஏகாதிபத்தியத்தின் எழுச்சியும்” எனும் தலைப்பில் பேராசிரியர். அ.மார்க்ஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார். பின்னர் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.
இறுதி அமர்வு
தேநீர் இடைவேளைக்கு பிறகு
“சுற்றுச்சூழலும் – நமது கடமைகளும்” எனும் தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் உரை நிகழ்த்தி, மாணவர்களின் கேள்விகளுக்கும் விடையளித்தார்.
நிகழ்ச்சியை மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் நெறிப்படுத்தினார்.
மாணவர் இந்தியா மாநில A.அசாருதீன், மாநில பொருளாளர் A.ஜாவித், துணை செயலாளர் A.பஷீர் அஹமத் ஆகியோர் சிறப்பாக மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோரின் ஆலோசனையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.
பயற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் U.ரஹ்மத்துல்லா , துணைச் செயலாளர்கள் சர்தார், பாரூக், மருத்துவ சேவை அணிச் செயலாளர் முஹம்மது ரபீக், இளைஞரணி செயலாளர் அன்வர், IKP மாவட்ட செயலாளர் அப்துல் ரசீது உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
தகவல் ;
மாணவர் இந்தியா ஊடகப்பிரிவு,
தலைமையகம்