கல்லூரி விழாவில் மஜக & மாணவர் இந்தியா தலைவர்கள் பங்கேற்பு..!

image

image

image

சென்னை.ஏப்.09., இன்று தானிஷ் அகமது பொறியியல் கல்லூரி  சாதனையாளர்கள்  நாள் விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மற்றும் மாணவர் இந்தியா தலைவர்கள் பங்கேற்றனர், மாணவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற முன்னால் நீதிபதி பாஷா அவர்கள் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

மஜக மாநில பொருளாளர்  எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் , மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா M.sc., மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் ஜாவித் ஜாபர் MBA ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

இவ்விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சைய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மத் ஹாலித் மற்றும் காஞ்சி தென் சென்னை  மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் கபீர், மெய்தீன் அவர்கள் தலைமையில் மாணவர் இந்தியா மாணவச் செல்வங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை கல்லூரி நிறுவனர் மூசா ஹாஜியார் அவர்களும், கல்லூரி செயலாளர் காதர் ஷா அவர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
சென்னை.
09.04.2017.