(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்) இந்தியாவில் தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை என்ற முழக்கத்தோடு ஒற்றை ஆளுமையாய் நாடு முழுக்க வலம் வந்தவர் தோழர் M.C.ராஜ் அவர்கள். இதற்காக 'CERI' என்ற அமைப்பை தோற்றுவித்து ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளது போன்ற 'விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறை' இந்தியாவுக்கு தேவை என்பதை பரப்புரையாக்கினார். இக்கோரிக்கையை கடந்த 25 ஆண்டுகளில் இவர் அளவுக்கு இதுவரை யாரும் முன்னெடுத்து செயல்படவில்லை. நாடு முழுக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் சேவை இயக்க களங்களின் இது குறித்து கருத்தரங்குகளை நடத்தி அறிவுஜீவிகளை அணி திரட்டினார். CERI அமைப்பில் தமிழகம் சார்பில் நானும், விசிக-வின் துணைப் பொதுச்செயலாளர் தோழர்.சிந்தனை செல்வனும் இடம் பெற்று நாடு முழுக்க பயணித்தோம். தலைநகர் டெல்லியில் பல கருத்தரங்களில் பேசிடும் வாய்ப்பை M.C.ராஜ் அவர்கள் எங்களுக்கு வழங்கினார்கள். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்களின் போது, கடும் குளிரில் நாங்கள் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வீடுகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சென்று தேர்தல் சீர்திருத்தம் குறித்து விளக்கமளித்தோம். அந்த மாபெரும் சேவையில் M.C.ராஜ் அவர்கள் எங்களை வழி நடத்தினார். இதன் மூலம் நாடறிந்த தலைவர்களோடு உரையாடும் வாய்ப்பும் , அறிமுகமும்
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
இரயில்வேயில் பிரிமியம் தட்கல் எனும் நூதன திருட்டு… மத்திய அரசுக்கு மஜக கண்டனம்…
(மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் அறிக்கை) தெற்கு ரயில்வே துறை, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே 25 விரைவு ரயில்களுக்கு இருந்து வரும் பிரிமியம் தட்கல் முன்பதிவு முறையை மேலும் 100 விரைவு ரயில்களுக்கு விரிவுபடுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தை முன் அறிவிப்பு இல்லாமல் அமல்படுத்தி இருப்பது தகவல் அறியும் சட்டம் மூலம் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தட்கலுக்கு ஒதுக்கப்பட்ட 30 விழுக்காடு இருக்கையில் இருந்து பிரிமியமுக்கு 15 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. படிப்படியாக ஏற்கெனவே 25 ரயில்களுக்கு பிரிமியம் விரிவு படுத்தப்பட்டிருந்தது. இந்த தட்கல் சிஸ்டம் முறையில் சொற்ப வசதி படைத்தவர்கள் பயனடைந்து வந்தனர். அதில் 15 விழுக்காடு இருக்கைகள் இப்போது அவர்களுக்கும் எட்டாக் கனியாகி விட்டது. தட்கல் முறையில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் 100 ரூபாய் அதிகம் வசூலிக்கப்பட்டது. ஆனால் பிரிமியம் தட்கலில் சாதா வகுப்பு கட்டணத்தை காட்டிலும் 3 மடங்கு கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தட்கலில் போகும் வசதி கொண்டவர்களில் பாதி பேர் பயண வாய்ப்பை இழக்கின்றனர். ரயில்வே துறையானது மக்களின் தேவைக்கேற்ப தடங்களின் எண்ணிக்கையையும் ரயில்களின்
மாட்டு அரசியல் தூத்துக்குடியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… மஜக பங்கேற்பு.
தூத்துக்குடி.ஜூன்.06., இன்று 06:06:2017 காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் VVD சிக்னல் அருகில் திமுக , கம்யூனிஸ்ட் வலது, கம்யூனிஸ்ட் இடது, மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ஆதிதமிழர் பேரவை, மமக, மமமுக, தாமக, இ.யூ.முஸ்லீம் லீக், ஆதிதமிழர் கட்சி ஆகிய அனைத்து கட்சிகள் இணைந்து மாட்டு அரசியலில் ஈடுபடும் மத்திய மதவாத அரசைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமதி கீதா ஜீவன் MLA அவர்கள் தலைமை தாங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாஹீர்உசேன் கண்டன உரையாற்றினார். ஒருங்கிணைப்பை ஏற்ப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் அவர்களுக்கு மஜகவின் மாவட்ட செயலாளர் நன்றிதனைதெறிவித்தார். இந்நிகழ்வில் மஜகவின் தூத்துக்குடி, ஆத்தூர், உடன்குடி நிர்வாகிகளும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தோழமை அமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. தூத்துக்குடி மாவட்டம். #MJK_IT_WING 06.06.2017
நோன்பு கஞ்சியை சகோதர சமுதாய மக்களுக்கு வினியோகிப்போம்!
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதல பதிவு) புனித ரமலான் மாதம் இறைவனோடு நெருக்கத்தை ஏற்படுத்தும் அற்புதமான மாதமாகும். திருக்குர்ஆன் உலக மக்களுக்கு அருளப்பட்ட மாதம் என்பதால் இது கூடுதல் சிறப்பை பெறுகிறது. உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் இறையச்ச உணர்வோடு நோன்பிருந்து, நல்ல காரியங்களை நாள்தோறும் நிறைவேற்றி, பாவங்களிலிருந்து மீளும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். நமது நாட்டில் ரமலான் மாதத்தையும், நோன்பையும் இந்து , கிறித்தவ சகோதரர்களும் மிகுந்த மரியாதையோடு உற்று நோக்குகிறார்கள். தங்களின் நட்பை வெளிப்படுத்தும் வகையில், அவர்களில் சிலர் ஒரு நாள் நோன்பிருந்து ஒரு புதிய அனுபவத்தை பெற்று மகிழ்கிறார்கள். முஸ்லிம்கள் குடியிருக்கும் பகுதிகளில் வாழும், முஸ்லிம் அல்லாத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொது இடங்களில் ரமலான் மாதத்தில் எதையும் சாப்பிட அனுமதிப்பதில்லை. இது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, நமது பாரம்பரிய உறவுகளின் உச்சமாகும். இத்தகைய சூழலில், சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பு ரமலான் மாதத்தில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புனித ரமலானில் காய்ச்சப்படும் நோன்பு கஞ்சியை சகோதர சமுதாய மக்கள் மிகவும் விரும்புகிறார்கள் . இந்நிலையில் அன்பையும் , உறவையும் வலுப்படுத்தும் வகையில் , நோன்பு
இரா. செழியன் மரணம் .! மஜக இரங்கல் .!
அறிஞர் அண்ணாவின் அன்புக்குரியவரும் , நாவலர் நெடுஞ்செழியனார் அவர்களின் தம்பியுமான இரா. செழியன் அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது . மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என வட இந்திய தலைவர்களால் போற்றப்பட்டவர் . நாடாளுமன்ற சட்ட நுட்பங்களை பலரும் இவரிடம் கேட்டுத்தான் தெரிந்துக் கொள்வார்கள் . அவர் நாடாளுமன்றத்திலும் , சட்டமன்றத்திலும் எழுப்பிய விவாதங்களும் , கேள்விகளும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன . தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகவும் , பல அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனைகளை சொல்லும் அறிஞராகவும் திகழ்ந்தார் . அவரை இழந்துவாடும் ஆதரவாளர்களுக்கும் , குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரங்கலையும் , ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 06.06.2017