மாட்டு அரசியல் தூத்துக்குடியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… மஜக பங்கேற்பு.

image

image

தூத்துக்குடி.ஜூன்.06., இன்று 06:06:2017 காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் VVD சிக்னல் அருகில் திமுக , கம்யூனிஸ்ட் வலது, கம்யூனிஸ்ட் இடது, மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள்,
காங்கிரஸ், ஆதிதமிழர் பேரவை, மமக, மமமுக, தாமக, இ.யூ.முஸ்லீம் லீக், ஆதிதமிழர் கட்சி ஆகிய அனைத்து கட்சிகள் இணைந்து மாட்டு அரசியலில் ஈடுபடும் மத்திய மதவாத அரசைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமதி கீதா ஜீவன் MLA அவர்கள் தலைமை தாங்கினார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாஹீர்உசேன் கண்டன உரையாற்றினார்.

ஒருங்கிணைப்பை ஏற்ப்படுத்திய
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் அவர்களுக்கு மஜகவின் மாவட்ட செயலாளர் நன்றிதனைதெறிவித்தார்.

இந்நிகழ்வில் மஜகவின்
தூத்துக்குடி, ஆத்தூர், உடன்குடி நிர்வாகிகளும் மற்றும்
தூத்துக்குடி மாவட்ட  தோழமை அமைப்பு நிர்வாகிகளும்
கலந்து கொண்டனர்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
தூத்துக்குடி மாவட்டம்.
#MJK_IT_WING
06.06.2017