சென்னை. டிச.09., சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள மதரஸா-இ-ஆஸம் பள்ளியை நேற்று இரவு இடிக்க நடந்த சம்பவத்தை மஜக தலைமையில் பொது மக்கள் ஒன்றினைந்து தடுத்தனர்.
கூடுதலாக நள்ளிரவில் சாலைமறியல் போராட்டத்தையும் நடத்தினர். நள்ளிரவில் இடிக்க போகும் செய்தி கேள்விப்பட்டதும் மஜக மாநில செயலாளர் NA. தைமிய்யா அவர்கள் பொதுச்செயலாளரிடம் தகவலை தெரிவித்துவிட்டு, அனைத்து தரப்புயும் ஒன்று திரட்டினார்.
நாளை காலை பேசலாம் என காவல்துறை வாக்குறுதியளித்ததால் கலைந்துசென்றனர்.
இந்நிலையில் இன்று காலை மஜகவின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA., அவர்கள் முதல்வருக்கு இது குறித்து விரிவான தகவல்களை தெரிவித்தார்.
பிறகு மதியம் பொதுச்செயலாளரை முதல்வரின் தனிச்செயலாளர் கார்த்திக் அவர்கள் தொடர்புகொண்டு அங்கு அரசு சார்பில் இப்போதைக்கு எவ்வித பணிகளும் நடைபெறாது என்ற உத்தரவாதத்தை முதல்வர் தங்களிடம் தெரிவிக்க சொன்னதாக கூறினார்.
அதனை தொடர்ந்து பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையின் அவர்களும் போனில் பொதுச்செயலாளரை தொடர்புகொண்டு, அங்கு தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் புதிய பணிகள் மேற்கொள்ளப்படாது என்றும், அதன் ஆவணங்கள் சரிபார்க்கப்படு வருவதாகவும் உறுதியளித்தார்.
அதனடிப்படையில் மஜகவின் முன் முயற்சியில் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்திற்கு அழைத்து பேசினார்.
இச்சந்திப்பில் கூட்டமைப்பு தலைவர் அப்போலோ ஹனிபா,மஜக மாநில செயலாளர்கள் NA. தைமிய்யா, சீனி முகம்மது, முஸ்லீம் லீக் துணை தலைவர் அப்துல் ரஹ்மான் Ex. MP, SDPI தெஹ்லான் பாக்கவி, INTJ பாக்கர் , TNTJ மாவட்ட செயலாளர் சாகுல், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மன்சூர் காசிமி, INL அப்துல் ரஹீம், காங்கிரஸ் இதாயத்துல்லாஹ், கோனிக்கா பசீர்
மஜக மாநில துணை செயலாளர் திருமங்கலம் சமீம், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் தாம்பரம் தாரிக், TNTJ மாவட்ட பொருளாளர் சிந்தா மதார். ஆகியோர் உடனிருந்தனர்.
இச்சந்திப்பு முடிந்ததும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இராமநாதபுரத்தில் இருந்த மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்.
09-12-2017