தஞ்சை. டிச.09., மல்லிபட்டிணத்தில் பத்து நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்த மீனவர்கள் இன்று கிழக்கு கடற்கரை சாலையில் போராட்டம் நடத்தினர்.
இன்று ECR சாலை வழியாக ராமநாதபுரம் சென்ற மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், போராட்டக்காரர்களை சந்தித்து பேசினார். பிறகு, அவர்களின் கோரிக்கையை கேட்டுக்கொண்டு இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசினர். மேலும், மீன் வளத்துறை அதிகரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கு மாறு கோரினார்.
அதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தில் குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவ பஞ்சாயத்தார்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
வானிலை முன்னறிவிப்பு காரனமாக கடலுக்கு போகாத நாட்களுக்கு வாருவாய் இழப்பிற்குறிய ஈட்டுத்தொகையை பெற்றுத்தருவது குறித்து மீன் வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமாரிடம் பேசுவதாக உறுதியளித்தார்.
இறுதியாக அவர்களிடமிருந்து விடைபெறும்போது, மீனவ சமுதாயத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை நினைவு கூர்ந்து தங்களுடைய நன்றிகளை கூறிக்கொண்டார்கள்.
இந்நிகழ்வுகளின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரீஸ் மற்றும் மஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
09.12.17