You are here

தமிழக முதல்வர் கன்னியாகுமரி செல்ல வேண்டும்..! ராமநாதபுரத்தில் மஜக பொதுச் செயலளர் தமிமுன் அன்சாரி MLA பேட்டி..!!

இராமநாதபுரம்.டிச.09., கட்சி வளர்ச்சி குறித்த பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று ராமநாதபுரம் வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அங்கு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களை தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள் நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூற வேண்டும் என்றார்.

மேலும் கேரளா அரசு அம்மாநிலத்தில் செய்யும் நிவாரண உதவிகளுக்கு இணையாக தமிழக அரசும் செய்ய வேண்டும் என்றார்.

மேலும், சென்னை அண்ணா சாலையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு சொந்தமான மதரஸா ஆஸம் இருக்கும் 16 ஏக்கர் இடத்தில், முஸ்லிம் சமுதாயத்தை கலந்து ஆலோசிக்காமல் தமிழக அரசு எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கெண்டார்.

இப்பேட்டியின் போது துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுலாபுதீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில விவசாயிகள் அணி மாநில செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட செயலாளர் இலியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_இராமநாதபுரம்_மாவட்டம்
09.12.17

Top