திருவண்ணாமலை.டிச.09., கடந்த மாதம் 4-ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் வங்கியின் அடியாட்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்கு காவல்துறை இதுவரையிலும் எந்தவொரு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்காததை கண்டித்து, இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கே.பாலகிருஷ்ணன் Ex.MLA, அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை கோட்டாசியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது., M.Com அவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை நிகழ்த்தினார்.
ஞானசேகரன் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்கவும், மரணத்திற்கு காரணமான வங்கியின் மேலாளர் மற்றும் அடியாட்களான ராஜா, வெங்கடபதி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற இழப்பு இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டில் விவசாயிகள் பிரச்சினை , மீனவ சமுதாய பிரச்சனைகள் தீர்வு காணாமல் இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது என்றும் மஜக சார்பில் கண்டனத்தை பதிவுசெய்தார்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அன்வர் பாஷா, மாவட்ட பொருளாளர் சையத் முஸ்தபா ஆகியோர் உடன் இருந்தனர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பழ.நெடுமாறன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்கம் பி.ஐயாக்கண்ணு , அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, பி.ஆர்.பாண்டியன், தமிழ்த்தேசப் பேரியக்கம் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்