இராமநாதபுரம். டிச.27., இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான் குளத்தில் ஜமாத்தினர் சார்பில் மீலாது விழா, மதரஸா மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா, பள்ளி சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதுவரை அரசியல் தலைவர்கள்யாரும் இவ்வூரில் அனுமதிக்காத மரபு இருந்தும் நிலையில், முதல் முறையாக மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர், மலேசியா வாழ் பிரமுகர்களும் அதிக அளவில் பங்கேற்க இந் நிகழ்ச்சியில் 300 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பகல் பொழுதில் மட்டும் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையின் சுறுக்கம் பின்வருமாறு.
பெண்ணுரிமையை நிலைநாட்டிய முதல் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் என்பது உண்மையாகும். பெண்குழந்தைகளை உயிரோடு புதைத்த அரேபியர்கள், நபிகள் நாயகத்தின் போதனையில் மனம் மாறினர். அவர் பெண் குழந்தைகளை கொல்வதை தடை செய்தார்கள்.
மூன்று பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அவர்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்றுக்கொடுத்து அவர்களுக்கு திருமணமும் செய்து கொடுத்தால் சுவர்க்கம் உறுதி என்றார்கள்.
பெண்களுக்கு தந்தையின் சொத்தில்
பங்குண்டு என்றார்கள்.
முன்னுரிமை என்றபோது முதல் மூன்று இடங்களை தாய்க்குத்தான் கொடுத்தார்கள். பிறகுதான் தந்தைக்கு கொடுத்தார்கள்.
ஹீதைபியா உடன்படுக்கையின் போது ஹஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது ஒரு பதட்டம் உறுவானது. நபிகளின் தோழர்கள் கோபமடைந்தார்கள். அவர்களை அமைதிபடுத்த நபிகள் முயற்சித்தார்கள்.
அப்போது கூடாரத்தில் அவரது அருமை மனைவி உம்மு சலிமா (ரலி)அவர்கள், கணவனுக்கு ஆறுதலையும், ஆலோசனையும் கொடுத்தார்கள். அதாவது நீங்கள் முதலில் தலைமுடியை கழியுங்கள், அதைப்பார்த்து உங்கள் தோழர்களும் பின்பற்றுவார்கள் என கூறினார்கள். அதன்படியே நபிகள் நாயகம் செய்ய கோபம் தனிந்த அவரது தோழர்களும் அதையே பின்பற்றினார்கள்.
மனைவியிடம் இக்கட்டான நேரங்களில் ஆலோசனைகளை கேட்க கூடியவர்களாகவும் நபிகள் நாயகம் (ஸல்) இருந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்)பெண்களை மிகவும் மதித்தார்கள். பெண் கல்வியையும், அவர்களின் உரிமையையும் போற்றினார்கள். இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்துகிறது அது ஒடுக்கவில்லை ஒழுங்காக வழி நடத்துகிறது. இவ்வாறு மஜக பொதுச்செயலாளர் உரையாற்றினார்கள்.
அதன்பிறகு ஜமாத்தினரின் விருந்தோட்டத்திற்கு பிறகு பள்ளியில் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் சாத்தான்குளம் ஜமாஅத் தலைவர் காபத்துல்லா, பொருளாளர் அப்துல் மஜீத், டத்தோ அப்துல் ஹக்கிம், மஜக துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாபுதீன், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை A.M.ஹாரிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் இதில் மாவட்ட பொருளாளர் i.அப்துல் நசீர், மாவட்ட துணை செயலாளர்கள் தேவிப்பட்டினம் சுல்தான், RS. மங்களம் அபுதாஹிர், தொண்டி முஹம்மது, கீழக்கரை ஹபீப், வர்த்தக அணி செயலாளர் இபுனு சூது, விவசாய அணி தொண்டி ராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_இராமநாதபுரம்_கிழக்கு_மாவட்டம்
28.12.2017