கோவை.டிச.28., கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட சூற்றுச்சூழல் அணியின் மாவட்டசெயலாளர் AK.முஹம்மது சலீம், துணை செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் செய்யது இப்ராஹிம் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது தொகுதியின் அடிப்படை பிரச்சனைகளான சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மழைநீர் வடிகால், ரேஷன் பொருட்கள், வினியோகம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட MLA, அவர்கள் விரைவில் இப்பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய நேரில் வருவதாகவும், வரும் போது தங்களையும் அழைப்பதாகவும் கூறினார்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
28.12.17