முத்தலாக் மசோதா தாக்கல்..! மத்திய அரசுக்கு மஜக கடும் கண்டனம்..!!

image

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை! )

முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் அவருக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கும் மசேதாவை மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பதை வண்மையாக கண்டிக்கின்றோம்.

இதை ஒரு குற்றவியல் வழக்காக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது முஸ்லீம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளில் தலையிடுவதாகும்.

இவ்விசயத்தில் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தை கலந்து ஆலோசிக்காமல், மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்க கூடாது என வலியுருத்தியதையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை .

முத்தலாக் விசயத்தில் முஸ்லீம் பெண்களின் உரிமைகளும், கண்ணியமும் பாதுகாக்கப்படும் வகையில் அதை கையாள்வோம் என்று ஜமாத்துகளும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் சொல்லிய பிறகும் மத்திய அரசு இவ்விசயத்தில் பிடிவாதம் பிடிப்பபதை ஏற்க முடியாது. மத்திய அரசு இச்சட்டத்தை திரும்பபெற வேண்டும். அல்லது அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தோடு கலந்து ஆலோசித்து உரிய திருத்தங்களோடு கொண்டுவரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அன்வர் ராஜா, AIIM தலைவர் அசாதுதீன் உவைசி, ராஸ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் JPN யாதவ், முஸ்லிம்லீக்கை சேர்ந்த முஹம்மது பசீர், பிஜி ஜனதா தள உறுப்பினர் மஹதாப்  உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

இவ்விசயத்தில் ஜனநாயக சக்திகளோடு இணைந்து தொடர்ந்து போராடுவோம் என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம்.

இவண்:

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
29.12.17