ரஜினி அரசியல் வருக ! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேட்டி..!!

திருவாரூர்.டிச.31., இன்று  திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேட்டில் செய்தியாளர்கள் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து ரஜினிகாந்த அவர்களின் அரசியல் அறிவிப்பு குறித்து பேட்டி எடுத்தனர்.

அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தாவது:-

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமேன்றாலும் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த, கமல்ஹாசன், விஷால் என அனைவருக்கும் உரிமை உண்டு. நல்ல செயல்பாடுகளும், மக்கள் ஆதரவும் இருந்தால் ஆட்சிக்கு வரலாம்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவேன் என பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்த. சகோதரர் ரஜினிகாந்த அவர்கள்,இன்று தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திக்கிறார்.

அவருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கேப்டன் விஜயகாந்த அவர்கள், டாக்டர் கலைஞர் அவர்களும்,டாக்டர் ஜெயலலிதா அம்மா அவர்களும் அரசியலில் வலிமையுடன் செயல்பட்டுக் கொண்டருக்கும் போது துணிச்சலுடன் அரசியல் களம் கண்டார்.

இன்று ஒரு வெற்றிடம் ஏற்பட்டது போல தோற்றம் உருவாகியாருக்கும் காலக் கட்டத்தில் அவர் அரசியலுக்கு வருவது சந்தேகங்களை உருவாக்குகிறது.

அவரது ரசிகர்கள் எல்லோரும் வாக்ககளர்களாக அரசியலில் மாறுவார்களா?என தெரியாது.

கழகங்கள் இல்லாத தமிழகம், கவலைகள் இல்லாத தமிழகம்  என்ற முழக்கத்தை பாஜக முன் வைத்துள்ள நிலையில் அக்கட்சி தலைவர்கள் போட்டிப் போட்டு ரஜினியின் வருகையை வரவேற்கிறார்கள்.
 
அவர் ஆன்மீக அரசியல் என்று கூறியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இது பால்தாக்கரே பாணி ஆன்மீக அரசியலா?
ஜெயலலிதா அம்மா, மூப்பானார் பாணி ஆன்மீக அரசியலா? என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாடு பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்களாலும் தோழர் ஜீவா, ராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களாலும் பக்குவப்படுத்தப்பட்ட பூமி.

இங்கு பெரியாரிஸமும்,கம்யூனிஸமுமம், தமிழ்தேசிய அரசியலும் நிறைந்துள்ளது.

எனவே ரஜினிகாந்த அவர்கள், பாஜகவின் ஊது குழலாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை தெளிவுப்படுத்த வேண்டும்.

இடஒதுக்கீடு, சமூகநீதி குறித்து அவரது  நிலைப்பாட்டை விளக்க வேண்டும்.

தமிழ்நாடு இந்தியாவிலேயே பின்தங்கியிருப்பது போல பேசுவதும்,அவர் வந்தால் சரியாகி விடும் என்பதும் தவறானது.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் NO 1 மாநிலமாகும்.இங்கு தான் குக்கிராமங்களிலும் குடிநீர்வசதிகள்,தார்சாலைகள்,மின்சார இணைப்புகள்,பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

சகோதரர் ரஜினி அவர்களின் பூர்விக மாநிலமான மஹாராஷ்டிராவிலும், பிறந்த மாநிலமான கர்நாடகாவிலும்
அது இல்லை என்பது தெரியுமா?

அரசியல்வாதிகள் எல்லோரும் கொள்ளைக்காரர்கள் என்பது போல பேசக் கூடாது.அது ஒரளவு உண்மையாக இருந்தாலும்,ஜயா நல்லக்கண்னு போன்றவர்களும் நம்மிடையே உள்ளனர் என்பதை மறக்க கூடாது.

அது போல வருமான வரியை முறையாக கட்டாத நபர்களும் உண்டு.அதில் பல நடிகர்கள் முறையாக வரி கட்டமால் ஏமாற்றுவதும் கொள்ளை தான்.

கடந்த இரண்டாண்டுகளாக தமிழகம் தலைகுனிவே சந்தித்துருப்பதாக அவர் கூறுகிறார் அதில் உண்மையும் இருக்கிறது. மிகையும் இருக்கிறது.

அதே நேரம் இந்த இரண்டாண்டில்தான் விவசாயிகள் மீத்தேனுக்கு எதிராகவும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் போராடினார்கள்.

முன் எப்போதையும் விட,இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டார்கள்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழர்கள் சாதி,பேதமின்றி தமிழ்நாடு எங்கும் போராடினார்கள்.சகோதரர் ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டுக்கு சற்று தூரத்தில் மெரினாவில் இளைஞர்களும்,மாணவர்களும் இரவு பகலாக போராடினார்கள்.

அப்போது  இவரது நிலைபாடு என்னவாக இருந்தது என்ற கேள்விகள் எழுகிறது

தேர்தல் நேரத்தில் தான் கட்சி ஆரம்பிம்பேன் என அவர் கூறுவதும் விமர்சனம் ஆகியிருக்கிறது.

அவர் தெளிவான திட்டங்களுடன்  சாதி பேதமின்றி, அனைவரையும் அரவனைக்கும் வகையில் யாருடைய தூண்டுதவமின்றி சுதந்திரமான போக்குடன் செயல்பட்டால்  அவரை மக்கள் வரவேற்பார்கள். எங்களது வாழ்த்துக்களும் உண்டு.

முன்பு  அவரது படங்கள் வெளிவரும் போது ஏற்படுத்தப்படும பரபரப்பு போல இதுவும் இருந்துவிடக்கூடாது.

இவ்வாறு பேட்டியின் போது மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் கூறினார்.

தகவல்;-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவாரூர்_மாவட்டம்