ஜன.26,
மத்திய அரசே விவசாயத்தை அழிக்கும் மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மக்களுக்கு எதிரான மின்சார திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.
டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறை முயற்சியை கைவிட வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தை தொடர் மழையினால் பாதித்த மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாராபட்சமின்றி நிவாரணம் வழங்கிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் துரை ராஜ் அவர்களின் தலைமையில் இன்று மயிலாடுதுறை காவேரி நகரிலிருந்து கோட்டாச்சியர் அலுவலகம் வரை தேசிய கொடியுடன் விவசாயிகள் டிராக்டர்- அணிவகுப்பு நடைப்பெற்றது.
இப்பேரணியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜஹான், அஜ்மல் உசேன் மற்றும் ஒன்றிய, நகர, கிளை மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.
26.01.2021