ஜன.29., திண்டுக்கல் மாவட்டம் புதுஆயக்குடியில் சமூக நீதிக்காவலர் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் KM.ஷெரீப், அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு:- https://m.facebook.com/story.php?story_fbid=2244556205644142&id=700424783390633 நான் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்கு முன்பாக உரை தயாரிப்பு குறித்து கவனம் செலுத்துவேன் ஆனால் இந்நிகழ்ச்சிக்கு வரும்போது, பணி பளு காரணமாக உரை தயாரிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதை காரில் வரும்போது மஜக நிர்வாகிகளிடம் கூறினேன். நான் அது பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில், பாபா அவர்கள் நம் உணர்வில் கலந்திருக்கிறார், உள்ளத்தில் பதிந்திருக்கிறார்.அவர் பிறந்த ; அவர் விதைக்கப்பட்ட ஊரில், வரும்போதே ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. 1993ஆம் ஆண்டு அகில இந்திய ஜிஹாத் கமிட்டி சார்பில் மயிலாடுதுறையில் பிரம்மாண்டமான மாநாடு நடந்தது. அதில் கூரை நாடு முதல் மயிலாடுதுறை பூங்கா நகரம் வரை பேரணி நடந்தது. பேரணியை டாக்டர்.ராமதாஸ், டாக்டர்.பழனிபாபா, டாக்டர்.சேப்பன், ஆகியோர் பார்வையிட்டனர். நாங்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்றோம். அப்போதுதான் பாபாவை முதன் முதலில்
மஜக பொதுக்கூட்டம்
மஜக பொதுக்கூட்டம்
உள்நாட்டு அமைதியின் மூலமே வல்லரசு கனவு சாத்தியமாகும்! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு!
சென்னை மேடவாக்கத்தில் அமைந்திருக்கும் காயிதே மில்லத் கல்லூரியில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. காயிதே மில்லத் அவர்களின் பேரனும், கல்லூரியின் தாளாளருமான தாவூத் மியாகான் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சாரணர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு :- https://m.facebook.com/story.php?story_fbid=2240614932704936&id=700424783390633 இன்று இந்தியாவின் 71 வது குடியரசு தின விழாவை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதே நமது நாட்டின் சிறப்பாகும். பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், பண்பாடுகள் இவற்றின் கதம்பமாக நம்நாடு இருக்கிறது. வேறுபட்ட நிலவியல் அமைப்புகளையும் கொண்ட நாடு இதுதான். அதனால் தான் இந்தியாவை துணைக் கண்டம் என்றும் நாடுகளின் ஒன்றியம் என்றும் கூறி சிறப்பிக்கிறார்கள். இதை சிதைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளை, சமூகங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறார்கள். கல்வியை சாமான்யர்களுக்கு கடினமாக்கி அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து ஒரு கட்டத்தில் இடஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்ய துடிக்கிறார்கள். சமூகநீதியை, மதச்சார்பின்மையை மக்கள் உரிமைகளை அழிக்க துடிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒற்றை கலாச்சாரமாக்க துடிப்பது இந்தியாவின்
பேரறிவாளன் விடுதலைக்காக காத்திருக்கிறோம்! திருப்பூர் மஜக பொதுக்கூட்டத்தில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
திருப்பூர்.செப்.08., திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமையில், மாவட்ட பொருளாளர் S.முஸ்தாக் அகமது வரவேற்புரையுடன் மக்கள் எழுச்சியோடு நேற்று (07.09.2018) மாலை நடைப்பெற்றது. இதில் மாநில துணைச்செயலாளர் ஷமீம் அகமது பேசும்போது, #பாசிச_பாஜக_ஓழிக என்று முழக்கம் எழுப்பிய சோஃபியாவிற்கு ஆதரவாக, நாடு முழுக்க மக்கள் ஆதரவு திரண்டிருப்பதை சுட்டி காட்டி, இதுதான் இன்றயை இந்திய அரசியல் என்பதாக பேசினார். அடுத்து பேசிய துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், அவர்கள் சமீபத்தில் #கோவையில்_ஐந்து_முஸ்லிம்_இளைஞர்கள் மீது நாடக வழக்கு பதிவு செய்யப்பட்டு UAPA சட்டம் பாய்ச்சப்பட்டுருப்பதை கண்டித்து பேசினார். அடுத்து பேசிய திருப்பூர் #தெற்கு_தொகுதியின்_அதிமுக_MLA_குணசேகரன் அவர்கள் உலகளாவிய பிரச்சனைகளை எல்லாம் உதாரணம் காட்டி சட்டசபையில் பேசக்கூடியவர், உங்கள் #பொதுச்செயலாளர்_தமிமுன்_அன்சாரி என்று பாராட்டினார், திருப்பூரில் மஜக சமூக நல்லிணக்க கூட்டத்தை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்றவர், #மஜக_மற்ற_கட்சிகளை_விட_மாறுப்பட்டது என்று புகழ்ந்தார். தனக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்த போது, இன்ஸ்சுரன்ஸ் மூலம் கிடைத்த ஏலரை லட்சத்தை சேர்த்து பத்து லட்சத்தை, தனது தொகுதியில் கபரஸ்தானுக்கு இடம் வாங்க தருவதாக பலத்த கைத் தட்டலுக்கு இடையே அறிவித்தார். நேதாஜி
வீரசோழனில் மஜக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு ! அர்ப்பணிக்கும் போதே அழைப் வந்ததால் உடனே விரைவு !
விருதுநகர். ஆக.18., விருதுநகர் வடக்கு மாவட்டம் #வீரசோழன் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் 5வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி பொதுக் கூட்ட்த்துடன் நேற்று (17.08.2018) மாலை எழுச்சியாக நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக #நேதாஜி_சுபாஷ்_சேனா கட்சியின் தலைவர் வழக்கறிஞர்.மகாதேவன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது மஜகவின் அரசியல் , சமூக அணுகுமுறைகளை பாராட்டி பேசினார். எல்லா சமூக மக்களின் பிரச்சனைகளுக்காகவும் சட்டசபையில் மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA குரல் கொடுப்பதாகவும் பாராட்டி பேசினார். முஸ்லிம்களும், தேவர் சமூக மக்களும் ஒரே மாதிரியாக பாதிக்கப்படுவதாவும், நாம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும் என்றும் பேசினார்., அ.ம.மு.க மாவட்ட செயலாளர் இன்பத் தமிழன் பேசும்போது, தனது தந்தை தாமரைக்கனிக்கும், தனது தலைவர் TTV . தினகரனுக்கும் தமிமுன் அன்சாரி நண்பர் என்றும் கூறி மகிழ்ந்தவர், மன்னர் ஒளரங்கசீப் பின் நேர்மையான ஆட்சி முறை குறித்து சிலாகித்து பேசினார். தனது தந்தை ஷாஜஹானின் இறுதி சடஙகை அரசு செலவில் செய்யாமல், தனது சொந்த செலவில் செய்ததை வரலாற்று குறிப் போடு பேசினார்., மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம்.தாஜுதீன் பேசும் போது இந்த ஆம்புலன்ஸ் அனைத்து சமூக மக்களின்
மஜக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
திருப்பூர்.ஆக.02., மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹைதர்அலி தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது முன்னிலை வகித்தார். சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் விபரங்கள். 1.எதிர்வரும் செப்டம்பர் 7ம் தேதி மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA , கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் உ.தனியரசு MLA முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் சேது.கருனாஸ் MLA ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடத்துவதெனவும்., 2. பொதுக்கூட்டத்தை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 19 திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதெனவும்., 3. கடந்த மாதம் திருப்பூர் வந்த பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் ஏராளமானோர் மஜகவில் இணைந்தனர், புதியவர்களை கண்ணியப்படுத்தும்வகையில் , கட்சியில் இணைந்த சகோதரர்களில் ஒருவரான ராயல் பாஷா அவர்களை மாவட்ட துணைச்செயலாளராக நியமனம் செய்யக்கோரி தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 4.பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட இனி வாரந்தோறும் ஒவ்வொரு ஞாயிறன்று இரவு 7.30 மணிக்கு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அணியின் நிர்வாகிகள் பொதுக்கூட்டம் முடியும் வரை கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில்