You are here

பேரறிவாளன் விடுதலைக்காக காத்திருக்கிறோம்! திருப்பூர் மஜக பொதுக்கூட்டத்தில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு!

திருப்பூர்.செப்.08., திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமையில், மாவட்ட பொருளாளர் S.முஸ்தாக் அகமது வரவேற்புரையுடன் மக்கள் எழுச்சியோடு நேற்று (07.09.2018) மாலை நடைப்பெற்றது.

இதில் மாநில துணைச்செயலாளர் ஷமீம் அகமது பேசும்போது, #பாசிச_பாஜக_ஓழிக என்று முழக்கம் எழுப்பிய சோஃபியாவிற்கு ஆதரவாக, நாடு முழுக்க மக்கள் ஆதரவு திரண்டிருப்பதை சுட்டி காட்டி, இதுதான் இன்றயை இந்திய அரசியல் என்பதாக பேசினார்.

அடுத்து பேசிய துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், அவர்கள் சமீபத்தில் #கோவையில்_ஐந்து_முஸ்லிம்_இளைஞர்கள் மீது நாடக வழக்கு பதிவு செய்யப்பட்டு UAPA சட்டம் பாய்ச்சப்பட்டுருப்பதை கண்டித்து பேசினார்.

அடுத்து பேசிய திருப்பூர் #தெற்கு_தொகுதியின்_அதிமுக_MLA_குணசேகரன் அவர்கள் உலகளாவிய பிரச்சனைகளை எல்லாம் உதாரணம் காட்டி சட்டசபையில் பேசக்கூடியவர், உங்கள் #பொதுச்செயலாளர்_தமிமுன்_அன்சாரி என்று பாராட்டினார், திருப்பூரில் மஜக சமூக நல்லிணக்க கூட்டத்தை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்றவர், #மஜக_மற்ற_கட்சிகளை_விட_மாறுப்பட்டது என்று புகழ்ந்தார்.

தனக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்த போது, இன்ஸ்சுரன்ஸ் மூலம் கிடைத்த ஏலரை லட்சத்தை சேர்த்து பத்து லட்சத்தை, தனது தொகுதியில் கபரஸ்தானுக்கு இடம் வாங்க தருவதாக பலத்த கைத் தட்டலுக்கு இடையே அறிவித்தார்.

நேதாஜி சுபாஷ் சேனையின் தலைவர் #வழக்கறிஞர்_மாகாராஜன் பேசும்போது, முஸ்லிங்களை தனிமைப்படுத்தும் #சூழ்ச்சிகளை_சுட்டிக்காட்டி, அதை இனியும் அனுமதிக்கமாட்டோம் என கர்ஜித்தார். தேவர் சமூகமும், நேதாஜி சுபாஷ் சேனையும் முஸ்லிம் சமூகத்திற்கு அரணாக இருக்கும் என்றார்.

தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் #தனியரசு_MLA அவர்கள், தனக்கே உரிய கேலி, கிண்டலுடன் #பாசிச_சக்திகளை தோலுரித்தார். #தமிழக_கவர்னரை_பற்றி குறிப்பிடும்போது, அவர் பல கட்சிகளில் பயணித்தவர் என்றும், சொந்த கட்சி நடத்தி கவுன்சிலராக கூட ஜெயிக்காதவர் என்றும், வேலை வாய்ப்புக்காக பாஜக வில் சேர்ந்தவர் என்றும் சாடினார்.

நிறை உரையாற்றிய பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், சமூக நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து ஆழமாக எடுத்துரைத்தார். முடை நாற்றம் அடிக்கும் அரசியலில், அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டும் அல்ல… சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதும் எமது முக்கிய பங்கு என்று கூறினார்.

மஜக தொடங்கப்பட்ட 35 மாதத்தில், இது 31 வது பொதுக்கூட்டம் என்றும், சமூக நீதிக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், தமிழர்களின் உரிமைக்களுக்காவும், தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்காவும் எல்லா சாதி, சமூக, அரசியல் தலைவர்களையும் அரவனைத்து தொடர்ந்து இது போன்ற கூட்டங்களை நடத்துவோம் என்றார்.

தோழர் நல்லகண்ணுவையும், நடிகை நயன்தாராவையும் ஒரு தொகுதியில், நிறுத்தினால் நயன்தாராதான் ஜெயிப்பார் என்றும், அந்த அளவுக்கு அரசியல் கேட்டுப்பொய் இருக்கிறது என்றும், அதை சீர்ப்படுத்தி விழிப்புணர்வு ஊட்டுவதே #நமது_அரசியல் என்றார்.

தானும், தனியரசும், கருணாசும் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக தொடர்ந்து பாடுப்பட்டு வருவதாகவும், தமிழக அரசு சிறைவாசிகளின் விடுதலையில் பாகுபாடுயின்றி நீதியை நிலைநாட்டும் என நம்புவதாகவும் கூறினார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும், விடுதலை செய்வது குறித்து, இன்று அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணியிடம், தான் விரிவாக பேசியதாகவும் அதற்கு நல்ல பதிலே அமைச்சர்கள் தந்ததாகவும், அவர்களின் விடுதைலைக்காக தமிழ்நாடே காத்திருப்பதாகவும் உணர்ச்சி பொங்க கூறினார்.

இக்கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் SA.பாரூக், மாநில துணைச்செயலாளர்கள் கோவை பஷிர், ஈரோடு பாபு, #MJTS மாநில செயலாளர் கோவை ஜாபர், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, தலைமை செயற் குழு உறுப்பினர்கள் PM.இக்பால், காயல் சாகுல், வானவில் காதர் மற்றும் மஜக மாவட்ட, அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 1500 க்கும் மேற்ப்பட்ட பல் வேறு சமூகங்களை சார்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.

போக்குவரத்து நெரிசலான பகுதியில் மேடையை சுற்றிலும் மூன்று புறமும் மக்கள் திரண்டு இருந்தனர். இரவு 10:45 வரை அதே உற்சாகத்தோடு கூட்டம் கலையாமல் இருந்தது.

#திருப்பூரில்_விதை_தெளித்து, வேலி கட்டிருக்கிறது மஜக

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING,
#மஜக_திருப்பூர்_மாவட்டம்

Top