தோஹா.ஜன.27., கத்தார் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகளுக்கு கடந்த 26.01.2018 அன்று SDPI கட்சியின் கத்தார் மண்டல பிரிவான QISF ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்திருந்தது. அழைப்பை ஏற்று மஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் SDPI கட்சியின் சிறப்பு பேச்சாளராக மாநில செயற்குழு உறுப்பினர் கோவை அபு தாஹிர் அவர்கள் வருகை புரிந்தார்கள். அவரை வரவேற்கும் வகையில் நட்பின் அடிப்படையில் கத்தார் மண்டல மனிதநேய கலாச்சார பேரவையின் சார்பாக மண்டல செயலாளர் உவைஸ், ஒருஙகிணைபபாளர் KST அப்துல் அஜீஸ் , ஆலோசகர் ஹுசைன், மக்கள் தொடர்பு செய்யது கனி, தகவல் தொடர்பு செயலாளர் அப்துல் ரஜ்ஜாக் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அப்துல் அஜிஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்து, எதிர்வரும் 16.02.2018 அன்று கத்தார் மஜக சார்பாக நடக்கவிருக்கும் திருப்புமுனை மாநாட்டிற்கு அழைப்பும் தரப்பட்டது. தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை. #கத்தார் மண்டலம்.
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
கத்தாரில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம்..! குவைத் மண்டல MKP நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை..!! கத்தார் MKP நிர்வாகிகள் வரவேற்று உபசரிப்பு..!!
கத்தாரில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம்..! குவைத் மண்டல MKP நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை..!! கத்தார் MKP நிர்வாகிகள் வரவேற்று உபசரிப்பு..!! தோஹா.ஜன.22., கத்தார் நாட்டில் நடைபெறும் தொழில் முதலீட்டார்கள் கருத்தரங்கம் மற்றும் கத்தார் நாட்டில் தமிழர்களின் தொழில் முன்னேற்றம் போன்ற விசயங்களில் கலந்துகொள்ள குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை செயலாளர் முத்துகாப்பட்டி. ஹாஜா மைதீன் அவர்கள் வெல்டன் ரியல் புரோமோடர்ஸ் நிறுவனர் முகம்மது கவுஸ் அவர்கள், வேல்டு ஹலால் டெவலப்மெண்ட் சேர்மன் முகம்மது ஜின்னா அவர்கள் ஆகியோர் வருகைதந்தனர். அவர்களுடன் கத்தார் MKP மண்டல செயலாளர் முஹம்மது உவைஸ் , ஒருங்கிணைப்பாளர் KST அப்துல் அஜிஸ், மண்டல ஆலோசகர் கீழக்கரை ஹுசைன் , வர்த்தகர் அணி செயலாளர் ஷேய்க் மொஹிதீன், மக்கள் தொடர்பு செயலாளர் செய்யது கனி ஆகியோர் மரியாதையை நிமித்தமா சந்தித்து கலந்துயுரை யாடினார். இந்த சந்திப்பில் பல்வேறு தொழில் முன்னேற்ற விஷயங்கள் பரிமாறப்பட்டன. பிப்ரவரி 16 இல் கத்தார் MKPயினர் நடத்தும் "திருப்புமுனை மாநாட்டுக்கு'' அழைப்பு விடுக்கப்பட்டு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இறுதியாக MKP நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்த விருந்தில் அனைவரும் கலந்துகொண்டனர். தகவல்: #MKP_ஊடக_பிரிவு #MKP_கத்தார்_மண்டலம்
அபுதாபி மண்டல MKP நிர்வாகிகள் கூட்டம்..!
அமீரகம்.ஜன.14., அபுதாபி மண்டல மனிதநேய கலாச்சார பேரவை (MKP) நிர்வாகிகள் கூட்டம் மண்டல செயலாளர் ஹாஜி.முஹம்மது தையூப் அவர்கள் தலைமையில் கடந்த 12-01-2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் எதிர்வரும் 26-01-2018 அன்று அபுதாபி மண்டல பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது எனவும், தாயகத்திலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து பிரம்மாண்ட பொதுநிகழ்ச்சியை நடத்துவது என்றும், மாதம் ஒருமுறை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. தகவல் : #MKP_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு #மனிதநேய_கலாச்சார_பேரவை #ஐக்கிய_அரபு_அமீரகம் 12.01.18
MKP கத்தார் மண்டல ஆலோசனை கூட்டம்..!
கத்தார்.ஜன.14., மனிதநேய கலாச்சார பேரைவை (MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் (12.01.18) நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் உவைஸ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ், மண்டல துணைச் செயலாளர்கள் சகாப்தீன் மற்றும் பஷீர், பொருளாலர் யாசின், PRO.வாஜீத் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் பிற கட்சிகளில் இருந்து பல இளைஞர்கள் தங்களை மஜகாவில் இணைத்துக்கொண்டார்கள். இணைப்பு நிகழ்ச்சிக்கு, பின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர் வரும் பிப்ரவரி-15 அன்று கத்தாரில் MKP சார்பில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட மாநாட்டிற்கு தலைப்பு “திருப்புமுனை மாநாடு” என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கத்தார் மண்டல MKP பணிகளை துரிதப்படுத்தி, போர்கால அடிப்படையில் செயல்பட சகோதரர் மீசல் சையத் கனி அவர்களுக்கு மக்கள் தொடர்பு செயலாளராக நியமனம் செய்வது என மண்டல செயலாளர் முன் மொழிந்ததை மண்டல நிர்வாகிகள் அனைவரும் வழிமொழிந்தனர். தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் 12.01.2018
வாணியம்பாடியில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்!
வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக), அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 12.01.18