குவைத்.ஆக.23., குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை #MKP சார்பாக 75வது இந்திய #சுதந்திர_தின பவள விழாவை முன்னிட்டு இந்திய எனும் சிந்தனை என்ற தலைப்பில் காணொளி கருத்தரங்கம் கடந்த 20-08-2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் துவக்கமாக மண்டல தொண்டரணி செயலாளர் ஆயங்குடி அபுல் உசேன் அவர்கள் நீதிபோதனை நிகழ்த்தி துவக்கி வைக்க ரிக்கை கிளை செயலாளர் நாச்சியார்கோயில் சுல்தான் ஆரிப் அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் கர்நாடக ஆட்சியருமான தோழர் சசிகாந்த் செந்தில் IAS அவர்கள் மற்றும் மஜகவின் மாநில துணை செயலாளர் சகோ. புதுமடம் அனீஸ் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் முதலில் உரையாற்றிய தோழர் சசிகாந்த் செந்தில் IAS அவர்கள், அவரது உரையில் இந்திய என்பது பல்வேறு மதம் மொழி கலாச்சாரம் உள்ளடக்கிய நாடு இதில் அனைவரும் எந்த பாகுபாடுமின்றி இந்தியர் என்ற சிந்தனையில் ஓரணி சேரவேண்டும் என்றும் பாசிசம் போற்றும் மதரீதியிலான பிரிவினைகளை களைந்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று
அயலகச் செய்திகள்
குவைத் மண்டல தியாக திருநாள் கலந்துரையாடல்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளை முன்னிட்டு காணொளி கருத்தரங்கம் 20-07-2021 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துவக்கமாக மண்டல மருத்துவ அணி செயலாளர் சுவாமிமலை ஜாஹிர் உசேன், அவர்கள் நீதிபோதனை நிகழ்த்தி துவக்கி வைத்தார். ஊடகதுறை இணை செயலாளர் திருக்கோவிலூர் சலீம் ஷா, அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MA Ex.MLA அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள் அவரது உரையில், தற்போது உள்ள கொரோனா நோய் தொற்றிலிருந்தும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் அனைவரும் தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் பாதுகாத்து கொள்ளும்படியும், சூழல் விரைந்து சீர்பெற வேண்டி பிரார்த்திக்கும்படி கேட்டு கொண்டார். கொரோனா இரண்டாவது பேரலையில், மஜக வினர் ஆம்புலென்ஸ் சேவைகள்,ஆக்ஸிஜன் சிலிண்டர் வினியோக சேவைகள், நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கல், ஏழை பயனாளிகளை தேடி சென்று உதவுவதல் என உளத்தூய்மை யோடு பணியாற்றி யதை விபரமாக கூறினார். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்ப தாகவும், இந்த அரசு
கத்தார் மண்டல பெருநாள் சந்திப்பு..! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்பு!
மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி காணொளி வழியே நடைபெற்றது. கடந்த வெள்ளி மாலை 7.30 மணியளவில் கத்தார் மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் காணொளி (Zoom) மூலம் நடைபெற்ற நிகழ்வில் மண்டலத்தின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி Ex. MLA அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கீழக்கரை ஹுசைன், உத்தமபாளையம் உவைஸ், மற்றும் மண்டல துணைச் செயலாளர்கள் சிதம்பரம் நூர் முஹம்மது, பரங்கிபேட்டை அப்துல் ரசாக், திருச்சி நஜிர் பாஷா, மேலப்பாளையம் அல் பத்தாஹ், பரங்கி பேட்டை பாருக், மற்றும் மண்டல IT Wing செயலாளர் மேலப்பாளையம் ஜுபைர்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுச்செயலாளர் ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து, நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். கத்தார் மண்டம் சார்பாக நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். கொரோனா கால கட்டத்தில் நிர்வாகிகளின் பணிகளை பாராட்டினார். அடுத்த கட்ட பணிகளை தொடந்து முன்னெடுக்க அறிவுரை வழங்கினார். முதிர்ச்சியான மஜக வின் அணுகு முறைகளும், முற்போக்கு அரசியலும் மக்களால் வரவேற்கப்படுவது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கினார். பதவிக்காக நமது அரசியல் பயணம் இல்லை என்பதையும்,
2021 தேர்தலில் மஜக வெற்றிக்காக பாடுபடுவோம்! குவைத் மண்டல செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் 3-வது மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி 22 அன்று மாலை 7 மணிக்கு முர்காப் சிட்டியில் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் தலைமையில் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டம் மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது, அவர்கள், மண்டல பொருளாளர் பொதக்குடி சதக்கத்துல்லாஹ், அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கிளை நிர்வாகிகளை கொண்டு நிகழ்ச்சி நிரல் வழி நடத்தப்பட்டது, நிகழ்ச்சியின் துவக்கமாக ஜஹ்ரா கிளை செயலாளர் திருப்பத்தூர் கபூர் அவர்கள் நீதிபோதனை வழங்க குர்துபா கிளை துணை செயலாளர் திருவாடுதுறை ஆசிக், வரவேற்புரை வழங்கினார். இதில் மனிதநேய கலாச்சார பேரவையின் கட்டமைப்பு குறித்து மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது அவர்கள் கடந்து வந்த பாதையை விவரித்தார், தொடர்ந்து "நாம் அரசியலில் பயணிப்பது ஏன்?" என்ற தலைப்பில் மண்டல துணை செயலாளர் வேலம்புதுக்குடி சர்புதீன் அவர்கள், "இளைய சமுதாயம் மஜகவில் இணைவது ஏன்?" என்ற தலைப்பில் மண்டல துணை செயலாளர் கோணுழாம்பள்ளம் அன்சாரி அவர்கள், "கிளைகளும் மண்டல நிர்வாகமும்" என்ற தலைப்பில் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தும் அவர்கள், "மஜகவின்
இந்திய குடியரசு தினத்தை இரத்ததானம் செய்து கொண்டாடிய குவைத் மஜகவினர்!
குவைத். ஜன.24, மனிதநேய ஜனநாயக கட்சியின் வளைகுடா பிரிவான குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக 72ம் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நான்காம் ஆண்டு இரத்ததான முகாம் ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் 22/01/2021 வெள்ளிக்கிழமை அன்று மண்டல செயலாளர் நீடூர் முகம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது துவக்கமாக இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல துணை செயலாளர் இலங்கை மன்சூர் அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைக்க மண்டல தொண்டரணி செயலாளர் ஆயங்குடி அபுல் உசேன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் துவக்கம் முதலே பல்வேறு தமிழ் சார்ந்த அரசியல் கட்சி, இஸ்லாமிய சங்கங்கள், பொது நல அமைப்பு, தொண்டு நிறுவனங்கள், தமிழ் உணர்வாளர்கள் என பல்வேறு இயக்கத்தினரின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் குவைத் வாழ் தமிழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது மட்டுமல்லாது ஜாதி மதம் பேதமின்றி குருதி கொடை வழங்கி மனிதநேயத்தை பறை சாற்றினர். குருதி கொடை வழங்கிய அனைவருக்கும் நாகை சட்டமன்ற உறுப்பினரும் மஜக பொதுசெயலாளருமான மு.தமிமுன் அன்சாரி MA, MLA., அவர்கள் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழ் குவைத் மண்டல MKP சார்பாக வழங்கப்பட்டது. குருதி கொடை அளிப்பவர்களை