மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி காணொளி வழியே நடைபெற்றது.
கடந்த வெள்ளி மாலை 7.30 மணியளவில் கத்தார் மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் காணொளி (Zoom) மூலம் நடைபெற்ற நிகழ்வில் மண்டலத்தின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி Ex. MLA அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில்
மாநில செயற்குழு உறுப்பினர்கள்
கீழக்கரை ஹுசைன்,
உத்தமபாளையம் உவைஸ், மற்றும் மண்டல துணைச் செயலாளர்கள் சிதம்பரம் நூர் முஹம்மது, பரங்கிபேட்டை அப்துல் ரசாக், திருச்சி நஜிர் பாஷா, மேலப்பாளையம் அல் பத்தாஹ், பரங்கி பேட்டை பாருக், மற்றும் மண்டல IT Wing செயலாளர் மேலப்பாளையம் ஜுபைர்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொதுச்செயலாளர் ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து,
நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
கத்தார் மண்டம் சார்பாக நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். கொரோனா கால கட்டத்தில் நிர்வாகிகளின் பணிகளை பாராட்டினார்.
அடுத்த கட்ட பணிகளை தொடந்து முன்னெடுக்க அறிவுரை வழங்கினார்.
முதிர்ச்சியான மஜக வின் அணுகு முறைகளும், முற்போக்கு அரசியலும் மக்களால் வரவேற்கப்படுவது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கினார்.
பதவிக்காக நமது அரசியல் பயணம் இல்லை என்பதையும், நமது பணிகள் எப்போதும் உயிரோட்டமாக இருக்கும் என்றும், பதவிகள் வரும் போது அதை பயன்படுத்திக் கொள்வோம் என்றும் கூறினார்.
இந்நிகழ்வு கத்தார் மண்டல செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.
தகவல் :
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#கத்தார்_மண்டலம்
22.07.2021