குவைத்தில் பேரழுச்சியை தந்த மஜக! சமூகநீதி மாநாடு மாபெரும் வெற்றி

image

image

image

வளைகுடாவின் எண்ணை கிண்ணமாக திகழும் குவைத்தில் மஜகவின் வெளிநாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் கடந்த (23/12/2016) நடைபெற்ற சமூகநீதி மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
கடந்த ஒருமாத காலமாக மனிதநேய சொந்தங்கள் குவைத் முழுவதும் தீவிரமாக களப்பணி மற்றும் பரப்புரையில் ஈடுபட்டார்கள். ஃபர்வானியா, ஹவல்லி, கைத்தான், முர்காப், ஃபாஹில், பயான், கைஃபான், ஜெலிப், மஹபுல்லா, மங்காப், சால்வா, சுலைபிஹாத், குர்த்துபா, சுவைக், ஜாப்ரியா, ரிக்கை, ஒமேரியா, ஹசாவி, ரிஹாப், சல்மியா, உள்ளிட்ட கிளைகள் தீவிரமாக தமிழக – புதுச்சேரி மக்களை திரட்டும் பணிகளில் ஈடுபட்டார்கள்.

கடும் குளிர் வாட்டிய நிலையிலும் மாலை 6 மணிக்கு எல்லாம் அரங்கம் நிறையத் தொடங்கியது. பெண்களும் அரங்கின் ஒரு பகுதியில் திரண்டார்கள். சமூகநீதி மாநாட்டிற்கு மண்டல செயலாளர் முத்துக்காபட்டி.ஹாஜாமைதீன் அவர்கள் தலைமை ஏற்க்க மண்டல பொருளாளர் முஹம்மது நபீஸ் அவர்கள் தொகுத்துவழங்கினார், நிகழ்வின் தொடக்கமாக நீதி போதனையை இளம் போராளி சகோ. முகம்மது உசேன் அவர்கள் நிகழ்த்த முறையாக மாநாடு துவங்கியது.

மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் TVS.குழுமம் நிறுவனர் Dr.ஹைதர் அலி அவர்களும் சிங்கப்பூரிலிருந்து மாநாட்டிற்க்காக வந்திருந்த ஹலால் இந்தியா குழுமம் A.J.முஹம்மது ஜின்னா அவர்களும் உரை நிகழ்த்தினார்கள் மாநாட்டு சிறப்பு மலரை மஜகவின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான #சகோM_தமிமுன்_அன்சாரி_MA_MLA அவர்கள் வெளியிட TVS குழும தொழிலதிபர் சகோ. முத்துப்பேட்டை #டாக்டர்_SM_ஹைதர்_அலி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் #மௌலவி_KM_முகம்மது_மைதீன்_உலவி அவர்கள் அருமையான உரையை நிகழ்த்தினார். நிறைவாக ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்த பொதுச்செயலாளர் #சகோM_தமிமுன்_அன்சாரி_MA_MLA அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்கள்.

அரக்கிற்கு வெளியே குளிர் அதிமாக இருந்தாலும் அரங்கம் சூடாக இருந்தது. பிறகு பெரும் எதிர்பார்ப்போடு கேள்வி – பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் ஆவலுடன் கேள்விகளை எழுதிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் சிறப்பான விளக்கங்களை அளித்து அரங்கத்தை உற்சாகமாக்கினார்.

பல்வேறு சமுதாயத்தினரும் கலந்துக்கொண்ட இந்நிகழ்வு உண்மையான சமூக நல்லிணக்கத்தை குவைத் வாழ் தமிழகம் – புதுச்சேரி மக்களிடையே உருவாக்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

மஜகவை முஸ்லிம்கள் மட்டுமின்றி பிற சமுதாய மக்களும் ஆதரிக்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழர் என்ற உணர்வோடு சகல தரப்பினரும் கலந்து கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.

மாநாட்டின் அரங்கத்திற்க்கு முன்னாள் முதல்வர் #டாக்டர்_ஜெ_ஜெயலலிதா அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. மாநாட்டின்  நுழைவுவாயிலுக்கு சமூக நீதி காவலர் #ஷஹீத்_பழனிபாபா அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் குவைத்தில் நடைபெற்ற பெரும் கொண்ட நிகழ்ச்சியாக இந்நிகழ்வு அமைந்தது. மிக கட்டுக்கோப்புடன் தொண்டர் அணியினர் தங்கள் பணிகளை நிறைவேற்றினார்கள்.

மாநாடு அரங்கத்தில் பெண்கள் அதிகமாக கலந்துகொண்டனர், கூடுதலாக மக்கள் கூட்டம் இருந்ததால் நாற்காளிகள்  கூடுதலாக வரவழைக்கப்பட்டு நிறப்பப்பட்டும் அரங்கத்திற்கு வெளியே நூறுக்கும் மேற்பட்டோர் நின்ற நிலையிலேயே மாநாடு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

இந்நிகழ்வுக்கு மண்டல செயலாளர் சகோ.முத்துக்காபட்டி ஹாஜாமைதீன் மண்டல பொருலாளர் சகோ. நீடூர் நபீஸ், மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் மற்றும் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல கிளை உள்ளிட்டோர்கள் சிறப்பான கூட்டு உழைப்பினை செய்திருந்தனர்.

கடந்த 2013ல் சமூகநல்லிணக்க மாநாட்டில் பெரியார்தாசன் என்கிற அப்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்ட போது அதிகமானவர்கள் அரங்கில் நிறைந்திருந்தனர் அதே அரங்கில் நேற்று நடைபெற்ற சமூகநீதி மாநாடு நிகழ்ச்சியில் அதைவிட கூடுதலாக மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தகவல் : மனிதநேய கலாச்சார பேரவை
ஊடக பிரிவு
குவைத் மண்டலம்.