செப்டம்பர் 10 முற்றுகை..! தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஆயத்த ஆலோசனை கூட்டம்..!!

துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் பங்கேற்பு!

குடந்தை.ஜூலை.11.,
10 ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்யக் கோரி மஜக சார்பில் தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் வரும் செப்டம்பர் 10 அன்று சென்னையில் நடைபெற உள்ளது

இது தொடர்பான ஆயத்த ஆலோசனை கூட்டம் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் 11.07.2022 திங்கள் மாலை 6 மணியளவில் குடந்தையில் நடை பெற்றது.

இதற்கு மேலிட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான வல்லம் அகமது கபீர் அவர்கள் தலைமை வகித்தார்.

துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்கள் ஆயத்த ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதித்தார்.

சுவர் விளம்பரங்கள் வரைதல், வாகன முன்பதிவு செய்தல், மக்களை திரட்டுதல், நன்கொடை சேகரித்தல் ஆகியவை குறித்தும் பேசப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் முஹம்மது மஃரூப், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ்,தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, முஹம்மது இப்ராஹிம், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் முஹம்மது யாசின், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஹசேன் முஹம்மது, குடந்தை நகர செயலாளர் ராஜ் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
12.07.2022