You are here

மஜக இல்ல மணவிழா பஷீர் அகமது திருமண நிகழ்வில் பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!

ஜூலை 13,

மஜக சார்பு அமைப்பான மாணவர் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் மணமகன் பஷீர் அகமது அவர்களுக்கும், மணமகள் ஃபரீதா பானு அவர்களுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையேற்று வாழ்த்துரை ஆற்றினார்.

பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்தினார்,

துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, மாநிலச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், நாகை முபாரக், கோவை ஜாபர் அலி ஆகியோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, காயல் சாகுல், அசாருதீன், பேராவூரணி அப்துல் சலாம், பார்த்தீபன், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஃபிர்தெளஸ், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக், மற்றும் சென்னை மண்டலத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளும், கோவை மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
13.07.2022

Top