குவைத் மண்டல சுதந்திர தின கருத்தரங்கம் !

குவைத்.ஆக.23., குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை #MKP சார்பாக 75வது இந்திய #சுதந்திர_தின பவள விழாவை முன்னிட்டு இந்திய எனும் சிந்தனை என்ற தலைப்பில் காணொளி கருத்தரங்கம் கடந்த 20-08-2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் துவக்கமாக மண்டல தொண்டரணி செயலாளர் ஆயங்குடி அபுல் உசேன் அவர்கள் நீதிபோதனை நிகழ்த்தி துவக்கி வைக்க ரிக்கை கிளை செயலாளர் நாச்சியார்கோயில் சுல்தான் ஆரிப் அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் கர்நாடக ஆட்சியருமான தோழர் சசிகாந்த் செந்தில் IAS அவர்கள் மற்றும் மஜகவின் மாநில துணை செயலாளர் சகோ. புதுமடம் அனீஸ் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்

முதலில் உரையாற்றிய தோழர் சசிகாந்த் செந்தில் IAS அவர்கள், அவரது உரையில் இந்திய என்பது பல்வேறு மதம் மொழி கலாச்சாரம் உள்ளடக்கிய நாடு இதில் அனைவரும் எந்த பாகுபாடுமின்றி இந்தியர் என்ற சிந்தனையில் ஓரணி சேரவேண்டும் என்றும் பாசிசம் போற்றும் மதரீதியிலான பிரிவினைகளை களைந்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று அழைப்பு விடுத்தார்

தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் சகோ.புதுமடம் அனீஸ் அவர்கள் உரையின் போது சுதந்திர போராட்ட களத்தில் இஸ்லாமியர்கள் செய்த தியாகங்களையும் இந்தியாவிற்காக பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து இந்தியா எனும் தந்நாட்டிற்காக போராடியதை நினைவு கூர்ந்த அவர், இன்றைய பாசிசவாதிகளின் சூழ்ச்சிகளால் இஸ்லாமியர்கள் உள்பட பாசிச எதிர்பாளர்கள் அனைவரும் பலிகடா ஆக்கபடுவதாகவும் எடுத்துரைத்தார்

இந்நிகழ்ச்சியில் பல்வேறு சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு தங்களது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்,

இறுதியாக மண்டல துணை செயலாளர் ஏனங்குடி முஹம்மது பாஜில் கான் அவர்கள் நன்றியுரை வழங்க இனிதே முடிவுற்றது.

தகவல்,
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#Humanitarian_Cultural_Association
#MJK_IT_Wings_Kuwait
குவைத் மண்டலம்
20.08.2021