குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளை முன்னிட்டு காணொளி கருத்தரங்கம் 20-07-2021 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
துவக்கமாக மண்டல மருத்துவ அணி செயலாளர் சுவாமிமலை ஜாஹிர் உசேன், அவர்கள் நீதிபோதனை நிகழ்த்தி துவக்கி வைத்தார்.
ஊடகதுறை இணை செயலாளர் திருக்கோவிலூர் சலீம் ஷா, அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MA Ex.MLA அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்
அவரது உரையில், தற்போது உள்ள கொரோனா நோய் தொற்றிலிருந்தும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் அனைவரும் தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் பாதுகாத்து கொள்ளும்படியும், சூழல் விரைந்து சீர்பெற வேண்டி பிரார்த்திக்கும்படி கேட்டு கொண்டார்.
கொரோனா இரண்டாவது பேரலையில், மஜக வினர் ஆம்புலென்ஸ் சேவைகள்,ஆக்ஸிஜன் சிலிண்டர் வினியோக சேவைகள், நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கல், ஏழை பயனாளிகளை தேடி சென்று உதவுவதல் என உளத்தூய்மை யோடு பணியாற்றி யதை விபரமாக கூறினார்.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்ப தாகவும், இந்த அரசு அமைய தேர்தல் களத்தில் அரும் பாடுபட்டு உழைத்த மனிதநேய ஜனநாயக கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு தங்களது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்,
இறுதியாக மண்டல துணை செயலாளர் மாயவரம் சபீர் அஹமது, அவர்கள் நன்றியுரை வழங்க இனிதே முடிவுற்றது.
குவைத் மண்டல நிர்வாகிகள் இக் காணொளி சந்திப்பு மூலம் உற்சாகம் அடைந்ததாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தகவல்,
மனிதநேய கலாச்சார பேரவை
HUMANITARIAN CULTURAL ASSOCIATION
#MJK_IT_Wings_Kuwait
குவைத் மண்டலம்
20.07.2021