மாணவர் இந்தியா -பத்திரிக்கை அறிக்கை தமிழர்களின் பண்பாடான ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவாக அறவழியில் போராடிய தமிழின போராளி இயக்குனர்.கௌதமன் அவர்களை காவல்துறை அறம் தவறிய வழியில் தாக்கியது கண்டனத்திற்க்குரியது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே தாக்குதல் நடத்துவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தாக்குதலுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை வலியுறுத்துகிறோம்.இது போன்று தாக்குதல்கள் தொடருமேயானால் மாணவர்களின் ஆதரவை மாணவர் இந்தியா உணர்திக்காட்டும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இவண், முஹம்மது அஸாருதீன் மாநிலச் செயலாளர், மாணவர் இந்தியா
Author: admin
லால்பேட்டையில் ஜமாத்துல் உலமா தலைவருடன் மஜக தலைவர்கள் சந்திப்பு!
ஜன.15., துபாய் மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகி ஷபிகுர் ரஹ்மான் அவர்களின் திருமணத்தில் பங்கேற்ற மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, பொருளாளர் S.S ஹாரூன் ரசீது ஆகியோர் லால்பேட்டை வருகை தந்தனர். மஸ்ஜீதுல் நயீம் பள்ளியில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக, ஜமாத்துல் உலமாவின் மாநில தலைவர் அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களை அவர் வீட்டிற்க்கு சென்று பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA சந்தித்தார். அவருடன் பொருளாளர் ஹாரூன் ரசீத், மற்றும் கடலூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகளும் வருகை தந்தனர். பெருத்த உற்சாகத்தோடு மஜக நிர்வாகிகளை வரவேற்று உற்சாகப் படுத்தினார். அதுப்போல் முஸ்லிம் லீக்கின் உலமாக்கள் அணி தலைவர் தளபதி ஷபிகுர் ரஹ்மான் அவர்களுடனும் சந்திப்பு நடைப்பெற்றது. இரண்டு ஹஜ்ரத்களிடமும் பொதுச்செயலாளர் அவர்கள் நீண்ட காலமாக தனிப்பட்ட தோழமையோடு பல்வேறு ஆலோசனைகளை பெற்றுவருவது குறிப்பிடதக்கது. இன்று லால்பேட்டையில் (கொள்ளிமலை) மஜக கொடியை பொதுச்செயலாளர் ஏற்றி வைத்தார். லால்பேட்டையில் ஏராளமான இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். லால்பேட்டையில் ஏராளமான ஜமாத் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் வருகை தந்து மஜக தலைவர்களுடன் கலந்துரையாடினர். லால்பேட்டை வருகை உற்சாகமளிக்கும் வகையில்
திண்டுக்கல்லில் தடையை மீறி ஜல்லிகட்டை நடத்திய மஜக!
ஜன.15., இன்று மதியம் 3;30 மணிக்கு திட்டமிட்டவாறு திண்டுக்கல்லில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜல்லிகட்டு நடைப்பெற்றது. 30 க்கும் மேற்பட்ட காளைகளுடன் மஜகவினர் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் அன்சாரி தலைமையில் தயார் நிலையில் இருந்தனர். மஜகவின் அறிவிப்பை ஏற்று ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக திரண்டனர். பல்வேறு நெருக்கடிகளை மீறி, காவல்துறையின் அரண்களை உடைத்து இரண்டு காளைகளை மஜகவினர் அவிழ்ந்து விட்டனர். பொதுமக்கள் அதை ஆராவாரம் செய்து கொண்டாடினர். இந்நிகழ்வில் இந்து, முஸ்லிம், கிருஸ்துவ சமூதாயத்தை சேர்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதில் மஜக மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, பொருளாலர் மரைக்காயர் சேட், ஒன்றிய செயலாளர் குணசேகர், இளைஞர் அணி செயலாளர் முகம்மது நிஸ்தார், இந்தியன் பிரஸ் கிளப் தலைவர் Dr.சாம் திவாகர், நாம் தமிழர் கட்சி கணேசன், கோவில் நிர்வாகி சீனிவாசன், நாயுடு பேரவை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். காளையை அடக்கியவர்களுக்கு முடிவில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி(IT-Wing), மஜக திண்டுக்கல் மாவட்டம்
மஜகவின் திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்…
ஜன.15., நேற்று14/01/2017 அன்று திருவாரூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொதுக்குழு கட்டிமேடு ஆதிரெங்க கிளையின் சார்பாக *கட்டிமேடு ஹாஜி ஹபிபுல்லா* நினைவரங்கத்தில் மாலை சரியாக 5:45 மணிக்கு மாவட்ட செயலாளர் *PMA. சீனி ஜெகபர் சாதிக்* தலமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக வருகைதந்த மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும், மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் அவர்களும் சிறப்பான அறிவுறைகளை கூறி கட்சியை கட்டமைத்து செல்லவேண்டும் என கேட்டுக் கொண்டனர். இக்கூட்டத்தில் கிழ்கண்ட மாவட்ட துணை மற்றும் சார்பு அணி, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தகவல் தொழில்நுட்ப பிரிவு திருவாரூர் மாவட்டம் 14_01_2017
கறம்பக்குடியில் மஜக நகர செயற்குழு கூட்டம்
ஜன.14., புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இன்று ( 14.01.201) மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விரைவில் மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடத்துவது சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்றது... இதில் மாவட்ட துணைச் செயலாளர் கறம்பக்குடி முகம்மது ஜான் உள்பட நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு, புதுக்கோட்டை மாவட்டம். 14_01_2017