லால்பேட்டையில் ஜமாத்துல் உலமா தலைவருடன் மஜக தலைவர்கள் சந்திப்பு!

image

ஜன.15., துபாய் மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகி ஷபிகுர் ரஹ்மான் அவர்களின் திருமணத்தில் பங்கேற்ற மஜக பொதுச்செயலாளர் 
M. தமிமுன் அன்சாரி MLA, பொருளாளர் S.S ஹாரூன் ரசீது ஆகியோர் லால்பேட்டை வருகை தந்தனர்.

மஸ்ஜீதுல் நயீம் பள்ளியில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

முன்னதாக, ஜமாத்துல் உலமாவின் மாநில தலைவர் அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களை அவர் வீட்டிற்க்கு சென்று பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA சந்தித்தார். அவருடன் பொருளாளர் ஹாரூன் ரசீத், மற்றும் கடலூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகளும் வருகை தந்தனர்.

பெருத்த உற்சாகத்தோடு மஜக நிர்வாகிகளை வரவேற்று உற்சாகப் படுத்தினார்.

அதுப்போல் முஸ்லிம் லீக்கின் உலமாக்கள் அணி தலைவர் தளபதி ஷபிகுர் ரஹ்மான் அவர்களுடனும் சந்திப்பு நடைப்பெற்றது.

இரண்டு ஹஜ்ரத்களிடமும் பொதுச்செயலாளர் அவர்கள் நீண்ட காலமாக தனிப்பட்ட தோழமையோடு பல்வேறு ஆலோசனைகளை பெற்றுவருவது குறிப்பிடதக்கது.

இன்று லால்பேட்டையில் (கொள்ளிமலை)
மஜக கொடியை பொதுச்செயலாளர் ஏற்றி வைத்தார்.

லால்பேட்டையில் ஏராளமான இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

லால்பேட்டையில் ஏராளமான ஜமாத் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் வருகை தந்து மஜக தலைவர்களுடன் கலந்துரையாடினர்.

லால்பேட்டை வருகை உற்சாகமளிக்கும் வகையில் அமைந்தது.

தகவல்;

MJK_தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT_wing)
(கடலூர் தெற்கு)
15_01_17