மாணவர் இந்தியா -பத்திரிக்கை அறிக்கை
தமிழர்களின் பண்பாடான ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவாக அறவழியில் போராடிய தமிழின போராளி இயக்குனர்.கௌதமன் அவர்களை காவல்துறை அறம் தவறிய வழியில் தாக்கியது கண்டனத்திற்க்குரியது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே தாக்குதல் நடத்துவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தாக்குதலுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை வலியுறுத்துகிறோம்.இது போன்று தாக்குதல்கள் தொடருமேயானால் மாணவர்களின் ஆதரவை மாணவர் இந்தியா உணர்திக்காட்டும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்,
முஹம்மது அஸாருதீன்
மாநிலச் செயலாளர்,
மாணவர் இந்தியா