துபாயிலிருந்து வருகைதந்த கர்ப்பிணி மற்றும் பெண்ணிற்கு உதவிய, மஜக திருச்சி விமான நிலைய சேவைக்குழு!

துபாயிலிருந்து கர்ப்பிணி மற்றும் இளம்பெண் இணைந்து தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களை வரவேற்க வர உறவினர்களுக்கு இ-பாஸ் மறுக்கப்பட்ட நிலையில் ஏனங்குடி மஜகவினரை தொடர்பு கொண்டனர்.

அவர்கள் திருச்சி மஜக விமான நிலைய சேவைக் குழுவை தொடர்பு கொண்டு அப்பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர்.

தகவலறிந்த மஜக மாவட்ட செயலாளர் பாபுபாய் அவர்களின் தலைமையில் பொருளாளர் சேக்தாவூத், துணைச் செயலாளர்கள் காதர், பகுருதீன், இளைஞரணி செயலாளர் புரோஸ் கான், மருத்துவ சேவை அணி செயலாளர் அபூ உள்ளிட்டோர் நள்ளிரவில் வருகை தரும் விமானத்திற்காக காத்திருந்து வரவேற்றனர்.

தொடர்ந்து அடிப்படை சோதனைகளை முடித்து கொண்டு தாசில்தார் அவர்களின் அனுமதி பெற்று நாகை மாவட்டத்தில் தனிமைப்படுத்தி கொள்ள ஏதுவாக வாகன ஏற்பாடு செய்ததுடன் நாகப்பட்டினம் வரை பாதுகாப்பாக அழைத்து வந்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வசம் ஒப்படைத்தனர்.

பாதுகாப்பாக அழைத்து சென்று ஒப்படைத்த அணி செயலாளர்கள் புரோஸ்கான் மற்றும் அபூ ஆகியோரிடத்தில் மஜக வினர் உதவிக்கு மனப்பூர்வமான நன்றியினை அப்பெண்களின் உறவினர்கள் தெரிவித்தனர். நாகையில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தலை தொடர்ந்து அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.
02/07/2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*