மஞ்சக்கொல்லை மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!

ஜூலை.03,
நாகை மாவட்டம், மஞ்சக்கொல்லை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஊராட்சிக்குட்பட்ட புத்தூர் ரவுண்டானா பகுதியில் நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம் தலைமையில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

திமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் விசிக மாவட்ட நிர்வாகிகள், வணிகர்கள், ஓட்டுனர்கள், பொதுமக்கள் என சுமார் 350 க்கும் அதிகமானோர் அருந்தி பயனடைந்தனர்.

இதில் மஞ்சக்கொல்லை கிளை செயலாளர் ஷேக்அலி, பொருளாளர் அப்துல் ரஹ்மான், மருத்துவ சேவை அணி செயலாளர் அஸ்லம், மற்றும் மெய்தீன்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விநியோகித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.
02/07/2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.