சென்னை.மே.10., வேலூர் மாவட்டம் ஆம்பூர் பிலால் நகரில் உள்ள (SAFIYAMA PRIMARY SCHOOL) சஃபியாமா ஆரம்ப பள்ளியை அரசு உதவி பெறும் பள்ளியாக அறிவிக்கவும், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் (NAYA MADRASA URDU PRIMARAY SCHOOL) நயா மதரசா உருது ஆரம்ப பள்ளியை அரசு உதவி பெறும் பள்ளியாக அறிவிக்கவும், சென்னை அண்ணாசாலை தாஹிர் சாஹிப் தெருவில் அமைந்துள்ள அரசு முஸ்லிம் உயர் நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக அப்பள்ளிகளின் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மனிதநேய ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நேற்று 09.05.2017 தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.எ.செங்கோடையன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுதாஹிர், வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் J.M.வசிம் அக்ரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பள்ளிக்கூட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING சென்னை. 09.05.2017
Author: admin
குடிநீர் விநியோகம் குறித்து அதிகாரிகளுடன் நாகை MLA கலந்தாய்வு!
நாகை.மே.09., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் குறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதில் நாகை நகராட்சி ஆணையர், திருமருகல் மற்றும் நாகை ஒன்றிய BDOக்கள், பொறியாளர்கள் அடுத்தடுத்து கலந்துக் கொண்டனர். இதில் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அடுத்தக்கட்ட திட்டமிடல்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி தனது 2017-2018 ஆண்டுக்கான இரண்டு கோடி ரூபாய் நிதியிலிருந்து திருமருகல் ஒன்றியத்திற்கு 50 லட்சம், நாகை நகராட்சிக்கு 47 லட்சம், நாகை ஒன்றியத்திற்கு 25 லட்சம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு 15 லட்சம் என ஆகமொத்தம் 1 கோடியே 37 லட்சம் ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்தார். பிறகு மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். குடிநீருக்காக தனது நிதி ஒதுக்கீடு குறித்தும், அவற்றை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார். நாகை, நாகூர் கடற்கரைகளின் மேம்பாடு, அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், திட்டச்சேரியில் புதிய ரேஷன் கடை ஆகியவை குறித்தும் இச்சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 09/05/2017
மாணவர் பயிற்சி முகாம் பணிகளில் மாணவர் இந்தியா.
வருகின்ற மே 13,14 ஆகிய இரு தினங்கள் சென்னை, மாமல்லபுரத்தில் மாணவர் இந்தியா சார்பில் சிறப்பு திறன் மேம்பாடு முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 250 மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 75 மாணவர்களுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த அறிஞர்கள் வகுப்பெடுக்க உள்ளனர். முகாம் நடத்துவதற்கான பண்ணை வீட்டை இன்று (08.05.2017) காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், காஞ்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சர்தார் மற்றும் மருத்துவ சேவை அணி செயலாளர் ரஃபிக் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் : ஊடக பிரிவு #மாணவர்_இந்தியா 08.05.2017
நாகை சட்டமன்ற அலுவலகத்தில் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு!
நாகை.மே.07., சுட்டெரிக்கும் வெயிலின் தாகம் தீர்க்க பொதுமக்களின் சேவைக்காக நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களின் ஆலோசனைக்கிணங்க சட்டமன்ற அலுவலகத்தில் நாகை நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் 07-05-2017 இன்று மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாநில துணைச்செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் கலந்துகொண்டு பந்தலை திறந்துவைத்தார். மாநில விவசாய அணியின் செயலாளர் நாகை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர் தோப்புத்துறை சேக் மன்சூர், நாகை நகர செயலாளர் கண்ணுவாப்பா என்கிற சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜீஸ் ரஹ்மான் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நாகை நகர மஜக சார்பில் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்களுக்கு தினமும் மோர், குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்படும். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING நாகப்பட்டினம் மாவட்டம் 07-05-2017
வட்டாச்சியரை கண்டித்து திண்டுக்கல்லில் மஜக கண்டன ஆர்ப்பாட்டம்..! இணை பொது செயலாளர் பங்கேற்பு…
திண்டுக்கல்.மே.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டும், சர்வாதிகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கின்ற திண்டுக்கல் கிழக்கு வாட்டாச்சியர் திருமதி கற்பகத்தின் அடாவடிதனத்தை எதிர்த்து கேள்வி கேட்ட. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் யூ.மரைக்காயர் சேட் அவர்கள் மீது போலீசில் பொய் புகார் அளித்து கைது செய்த திண்டுக்கல் கிழக்கு வட்டாசியரை கண்டித்து மாவட்ட செயலாளர் ஏ.ஹபிபுல்லாஹ் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மஜக இணை பொதுச் செயலாளர் கே.எம்.மைதீன் உலவி அவர்களும், மாநில துணைசெயலாளர் எம்.திண்டுக்கல் அன்சாரி அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அன்பரசு அவர்களும் கண்டன உரை நிகழ்தினார்கள். மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றியம், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்களும், பெண்களும் திரளாக கலந்துக் கொண்டனர்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING திண்டுக்கல் கிழக்கு. 06.05.2017