சென்னை.ஏப்.19., இயக்குனர் கௌதமன் அவர்களின் முன் முயற்சியில் #நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை காமராஜர் அரங்கில் மாநாடு நடைபெற்றது. இதில் ஐயா நல்லகண்ணு, ஐயா பழ.நெடுமாறன், வைகோ, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ , தனியரசு எம்.எல்.ஏ, பெ.மணியரசன், திருமுருகன் காந்தி, தோழர் தியாகு, கொள்தூர் மணி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
மஜக பொதுச்செயலாளர் பேசும் போது நீட் தேர்வை இந்தியா முழுக்க ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டிலிருந்து அதற்கான போராட்டம் நாடு முழுக்க பரவ வேண்டும் என்றும், பேசினார்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை
19.04.2018